கடந்த ஒரு வாரமாக நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது!
தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதையடுத்து, உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் பகுதி பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உதகை - மஞ்சூர் சாலையில் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததாலும், இத்தலார், எம ரால்டு சாலையில் மண் சரிவாலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கூடலூர், பந்தலூர் பகுதிகளில் குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்ததால், 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கூடலூர் அருகே கோத்தர்வயல், தேன்வயல், பாக்கனா, இருவயல், மொளப் பள்ளி பகுதிகளில் உள்ள குடி யிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்த தால், மக்கள் வெளியேற்றப்பட்டு பள்ளிகளில் தங்கவைக்கப்பட்டனர்.
அவலாஞ்சி மின் நிலையத்தின் முன்புறம் மற்றும் பின்புறம் உள்ள மலையில் மண்சரிவு ஏற்பட்டு, மரங்கள் வெள்ளத்தில் அடித்துவரப்பட்டன. அவற்றை அகற்றும் பணியில், மின்வாரிய ஊழியர்கள் ஈடுப்பட்டுள்ளனர். உதகை - கூடலூர் சாலை அனுமாபு ரம் அருகே சாலையோரத்தில் மண்சரிவு ஏன்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மீட்புப் பணிகள் மேற்கொள்ள 80 பேர் கொண்ட பேரிடர் மீட்புக் குழுவினர், கோவையில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இக்குழுவினர் கூடலூர், பந்தலூர், குந்தா ஆகிய பகுதிகளில் மீட்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர். பேரிடர் பாதிப்புகளை உடனுக்குடன் தெரிவிக்க 1077 என்ற இலவச தொலைபேசி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நீலகிரியில் பெய்து வரும் கன மழை காரணமாக, கோவை மாவட் டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள 100 அடி உயரம் கொண்ட பில்லூர் அணை நிரம்பியது. இதனால், அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் 62,000 கனஅடி நீரும் பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.