18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த தடை இல்லை -உயர்நீதிமன்ற மதுரைகிளை!

தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 MLA-கள் இந்திய தேர்தல் ஆணையம், தமிழக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது!

Last Updated : Dec 10, 2018, 12:25 PM IST
18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த தடை இல்லை -உயர்நீதிமன்ற மதுரைகிளை! title=

தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 MLA-கள் இந்திய தேர்தல் ஆணையம், தமிழக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது!

டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதாக 18 MLA-கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், இத்தொகுதிகளில் மறுத்தேர்தல் நடைப்பெறும் பட்சத்தில் மக்களின் வரிப்பணம் வீணாக செலவிடப்படும். எனவே 2016-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சட்டசபை தேர்தலின் போது செலவிடப்பட்ட தொகையினை குறிப்பிடப்பட்ட 18 MLA-க்களிடம் இருந்து திரும்பப்பெற வேண்டும் என மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

மேலும் வசூளிக்கப்படும் தொகையினை கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட MLA-களிடம் இருந்த இத்தொகையினை பெறும் வரை 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் எனவும் மனுதாரர் குறிப்பிட்டிருந்தார். 

இந்த மனு இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடையில்லை என்றும், இந்திய தேர்தல் ஆணையம், தமிழக தேர்தல் ஆணையம் மற்றும் தகுதிநீக்கப்பட்ட 18 பேருக்கும் உயர்நீதிமன்ற மதுரைகிளை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

Trending News