கொரோனா ஊரடங்கு உள்ளவரை மின்தடை இருக்காது: அமைச்சர் செந்தில் பாலாஜி

கொரோனா காரணமாக போடப்பட்டுள்ள ஊரடங்கு முடியும் வரை மின்தடை இருக்காது என தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். வழக்கமாக பராமரிப்பு பணிகளுக்காக மின் வாரியம் மின்தடையை அறுவிக்கும். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 3, 2021, 12:36 PM IST
  • தமிழகத்தில் ஒரு நாள் தொற்றின் அளவு நாளுக்கு நாள் குறைந்துகொண்டு இருக்கிறது.
  • ஊரடங்கு முடியும் வரை மின்தடை இருக்காது என தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
  • ஊரடங்குக்குப் பிறகு மின்சார பராமரிப்பு பணிகள் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு உள்ளவரை மின்தடை இருக்காது: அமைச்சர் செந்தில் பாலாஜி   title=

சென்னை: இந்தியா முழுவதும் கொரோனா தொற்று தீயாய் பரவிக்கொண்டிருந்த நிலையில், தற்போது படிப்படியாக தொற்றின் அளவு குறைந்துகொண்டு வருகிறது. தமிழகத்திலும் ஒரு நாள் தொற்றின் அளவு நாளுக்கு நாள் குறைந்துகொண்டு இருக்கிறது. 

தொற்று பரவலைத் தடுக்க தமிழக அரசு பலவித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தளர்வுகளற்ற ஊரடங்கு தற்போது தமிழகத்தில் அமலில் உள்ளது. முன்னதாக, மே மாதம் 24 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை அமலில் இருந்த முழு ஊரடங்கு, ஜூன் 7 வரை நீட்டிக்கட்டுள்ளது.

இந்த நிலையில், கொரோனா (Coronavirus) காரணமாக போடப்பட்டுள்ள ஊரடங்கு முடியும் வரை மின்தடை இருக்காது என தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். வழக்கமாக பராமரிப்பு பணிகளுக்காக மின் வாரியம் மின்தடையை அறுவிக்கும். எனினும், தற்போது ஊரடங்கு உள்ளதால், மக்களுக்கு இன்னும் சிரமத்தை அதிகரிக்க வேண்டாம் என முடிவு செய்த மின்சாரத்துறை, பராமரிப்பு பணிக்காக மின்வாரியத்தால் அறிவிக்கப்படும் மின்தடைக்கான அனுமதி ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பை  மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டார்.

ALSO READ: Chennai COVID: 20% சென்னைவாசிகள் ஒரு டோஸ் கோவிட் தடுப்பூசி போட்டவர்கள்

இது குறித்து தெரிவித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, ஊரடங்கு முடியும் வரை தமிழகத்தில் (Tamil Nadu) மின்தடை இருக்காது என்றும் பராமரிப்பு பணிக்காக அறிவிக்கப்படும் மின்தடைக்கான அனுமதி அனைத்தும் ஒத்திவைக்கப்படுகின்றன என்றும் கூறினார். ஊராடங்கு காரணத்தால் அதிகப்படியான மக்கள் வீட்டிலிருந்தே பணிபுரிவதாலும், மாணவர்களும் ஆன்லைன் மூலம் கல்வி கற்று வருவதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 

வீட்டிலிருந்து ஆன்லைனில் படிக்கவும், அலுவலக பணிகளை செய்யவும் மின்சாரம் மிக முக்கிய அம்சமாக இருப்பதால், மக்கள் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி மேலும் தெரிவித்தார். ஊரடங்குக்குப் பிறகு மின்சார பராமரிப்பு பணிகள் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த டிசம்பர் முதல் எந்த வித பராமரிப்பு பணிகளும் நடக்காததால், ஆங்காங்கே பல பணிகள் நிலுவையில் உள்ளன என்றும் ஜூன் 7-க்கு பிறகு இவை அனைத்தும் சரி செய்யப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

இதற்கிடையில், நேற்று தமிழகத்தில் புதிதாக 25,316 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. 483 பேர் உயிரிழந்தனர். அதில் 204 பேர் தனியார் மருத்துவமனையிலும், 279 பேர் அரசு ஆஸ்பத்திரியிலும் இறந்தனர்.  நேற்று மட்டும் 32, 263 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார்கள். தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் நேற்று 2,217 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. கோவையில் அதிக அளவில் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. அங்கு 3,061 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

ALSO READ: இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்: தமிழ்நாட்டில் COVID-19 பரவல் வேகம் குறைகிறது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News