இந்தியா மற்றும் தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் எண்ணிக்கை அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களும் படிப்படியாக கடுப்பாடுகளை அதிகரித்து வருகின்றனர். தமிழகத்தைப் பொறுத்த வரையில், நர்சரி பள்ளிகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. 8 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் கூடும் இடங்களான திரையரங்குள், சலூன் மற்றும் உணவகங்கள் 50 விழுக்காடு வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
ALSO READ | நாடு முழுவதும் இன்று முதல் 15 - 18 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பரமணியன் தமிழகத்தில் 3வது அலை கொரோனா தொடங்கிவிட்டதாக தெரிவித்தார். அதேநேரத்தில், இதுவரை ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 3 நாட்களில் நெகடிவ் ரிசல்ட் வந்துவிடுவதாகவும், இருந்தாலும் அவர்கள் 5 நாட்கள் தங்கவைக்கப்பட்டு மறு டெஸ்டில் நெகடிவ் வந்தால் மட்டுமே வீட்டிற்கு அனுப்பப்படுவதாகவும் தெரிவித்தார். இதுவரை கிடைத்த முடிவுகளில் ஒமிக்ரானால் பெரும்பாலானோர் 5 நாட்களில் குணமடைந்துவிடுவதாக தெரிவித்தார்.
அதனடிப்படையில் 5 நாட்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். திங்கட்கிழமை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில் கொரோனா வைரஸால் 1,728 பேர் பாதிக்கபட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. ஒமிக்ரான் வைரஸூக்கு 21 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறியுள்ளது.
ALSO READ | போராட்டத்தில் அசர வைத்த பகுதி நேர ஆசிரியர்..! கோரிக்கை நிறைவேறுமா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR