ஒமிக்ரான் வேகமாக பரவக்கூடியது! ஆனாலும் பயப்படத் தேவையில்லை - சுகாதாரச் செயலர்

ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவக்கூடியது, ஆனாலும் மக்கள் பயப்படத் தேவையில்லை என சுகாதாரச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 22, 2021, 06:28 PM IST
ஒமிக்ரான் வேகமாக பரவக்கூடியது! ஆனாலும் பயப்படத் தேவையில்லை - சுகாதாரச் செயலர் title=

வேலூரில் இன்று மாலை ஒமிக்ரான் வைரஸ் தொற்று ஒழிப்பு மற்றும் கொரானா தடுப்பூசி செலுத்துவது குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் சுகாதாரச் செயலர் ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு பேரணியை துவக்கி வைத்தார். இப்பேரணி வேலூர் பழைய பேருந்து நிலையம் மற்றும் அண்ணா சாலை ஆகிய பகுதிகளில் சென்று கொரான தடுப்பூசி அவசியம் குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்கள். இந்தப் பேரணியில் மாவட்ட ஆட்சித்தலைவர் குமரவேல் பாண்டியன் மற்றும் மருத்துவ துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

omigron

விழிப்புணர்வு பேரணி முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், ஒமிக்ரான் வைரஸ் ஒரு மரபியல் மாற்றம் அடைந்த வைரஸ் ஆகும். உலகில் 98 நாடுகளில் ஒமிக்ரான் பரவியுள்ளது. இந்த வைரஸ் மூன்று மடங்கு தீவிரமடைந்து வேகமாக பரவக்கூடிய வைரஸ் ஆகும். தமிழ்நாட்டில்  ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்ட நபரும் அவருடைய தொடர்பில் இருந்த மற்ற நபர்களும் நல்ல முறையில் உள்ளனர். ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் பயப்படத் தேவையில்லை. 

ALSO READ | இந்தியாவில் 200ஐ தாண்டிய Omicron பாதிப்பு; அமலாகப்போகிறது Night Curfew

தமிழ்நாட்டில் இதுவரை தொண்ணூற்று ஐந்து லட்சம் பேர் இரண்டாம் தடுப்பூசி போடவில்லை. மேலும் 18 வயதிலிருந்து 44  வயது உடையவர்கள் 68 லட்சம் பேர் இன்னமும் முதல் தவணை தடுப்பூசி போடவில்லை. 45 வயது முதல் 60 வயது வரை உள்ள 30 லட்சம் பேர் தடுப்பூசி போடவில்லை. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 43 லட்சம் பேர் இன்னமும் முதல் தவணை தடுப்பூசி போடவில்லை. எனவே தடுப்பூசி போடாதவர்கள் உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் இதற்காக தொண்டு நிறுவனங்கள், வருவாய்த்துறையினர், மருத்துவத் துறையினர், காவல் துறையினர்,உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு துறையினர் தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

வெளிநாடுகளில் மூன்றாவது இலவச தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் உள்ள நிலையில் இந்தியாவில் முதல் தடுப்பூசி போட்டுக்கொள்ள இன்னமும் ஆர்வம் காட்டவில்லை. உலக சுகாதார நிர்வாணம் கூறுவது என்னவென்றால் தடுப்பூசியை போட்டுக்கொள்ளவேண்டும் முகக்கவசம் அணிய வேண்டும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும் காற்றோட்டம் உள்ள பகுதிகளில் இருக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது இதனை நாம் அனைவரும் பின்பற்ற வேண்டும். எனவே தமிழக அரசு போதிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது,, மேலும் பழக்க வழக்கங்களில் மாற்றம் ஏற்பட வேண்டும், தமிழகத்தில் கொரானா தடுப்பூசி போதிய அளவு இருப்பு உள்ளது.

நோய் கண்காணிப்பு காய்ச்சல் கண்காணிப்பு ஆகியவை தகுந்த முறையில் கண்டறிந்து தமிழக அரசு   தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மத்திய சுகாதார நிறுவனம் எந்த பகுதியில் 10 சதவீதம் அளவிற்கு நோய் தோற்று ஏற்பட்டுள்ளதோ அல்லது 40 சதவிகிதம் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தலோ அந்தப் பகுதியில் மட்டும் முழு கவனம் செலுத்தி தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டு உள்ளது . எனவே கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டிய நிலை தற்போது இல்லை. ஆனாலும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு  கொரானா பூஸ்டர் தடுப்பூசி போட மத்திய அரசு அறிவித்தால்தமிழக அரசு அதை முனைப்பாக செயல்படுத்தும்.

தமிழகத்தில் ஒமைக்ரான்  பரிசோதனை ஆய்வகம் தமிழக முதலமைச்சரின் ஆலோசனையின்படி DMS வளாகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது . அதே நேரத்தில் இந்த பரிசோதனை ஆய்வகம் மத்திய அரசுடன் இணைந்து தரநிர்ணய பணியில் இறுதி கட்டத்தில் உள்ளது . தற்போது புனேவில் உள்ள ஆராய்ச்சி ஆய்வகத்தின் கிளை ஆய்வகமாக அங்கீகாரம் பெறுவதற்கு கடைசி நிலையில் உள்ளது எனவும் அவர் கூறினார்.

ALSO READ | Omicron: தில்லியில் கிரிஸ்மஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுபாடுகள்..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News