ஆசிரியர்களின் சொத்து விவரங்களை பதிவு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் சொத்து விவரங்களை பதிவேட்டில் பதிவு செய்ய உத்தரவு!!

Last Updated : Sep 4, 2019, 11:21 AM IST
ஆசிரியர்களின் சொத்து விவரங்களை பதிவு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு! title=

அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் சொத்து விவரங்களை பதிவேட்டில் பதிவு செய்ய உத்தரவு!!

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்களை, பதிவேட்டில் தவறாமல் பதிவு செய்து பராமரிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் சுற்றறிக்கை மூலம் ஆணையிட்டுள்ளார். ஊழல் மற்றும் கண்காணிப்புத்துறையின் அறிவுறுத்தல்படி, சொத்து விவரங்களில் தவறு செய்திருக்கும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் மீது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் பதவி உயர்வு, அவர்களின் செயல் முறை தகுதி மற்றும் பணி மூப்பு அடிப்படையில் நடைபெற வேண்டும் என்றும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளிலும் பயோமெட்ரிக் வருகைப்பதிவேடு முறையை விரைந்து செயல்படுத்தவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே 7 ஆயிரத்து 728 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 579 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பயோ மெட்ரிக் வருகைப்பதிவேடு முறை அமல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 

Trending News