முன்னாள் எம்எல்ஏ பழ கருப்பையா தமிழ்நாடு தன்னுரிமை கழகம் என்ற அரசியல் கட்சியினை துவங்கப் போவதாக அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். பிப்ரவரி 5ஆம் தேதி கட்சியின் கொடி கொள்கை ஆகிய விவரங்களை வெளியிட்டு மாநாடு நடத்தப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் ஆதாரங்களை அவர் கலைத்து விடுவதாகவும் அதற்கு அரசு துணை போவதாகவும் பல கருப்பையா குற்றச்சாட்டி உள்ளார். திமுக கூட்டணி கட்சிகள் கொள்கை கோட்பாடுகளை மறந்து அவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டாமல் திமுகவுக்கு அடிபணிந்து இருப்பதாக காங்கிரஸ் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளை அவர் விமர்சித்துள்ளார்.
சென்னை சேபக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் பல கருப்பையா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில் வரும் ஐந்தாம் தேதி தமிழ்நாடு தன்னுரிமை கழகம் என்ற அரசியல் கட்சியினை துவங்கப் போவதாகவும் அதற்கான மாநாடு அன்று நடைபெறும் எனவும் கூறினார்.
கட்சியின் கொள்கை நேர்மை, காந்தியம், தமிழ் தேசியம் எனவும் கட்சி கொடியின் நிறம் பச்சை நிறம் அதில் தமிழ்நாடு நிலப்படம் மற்றும் காந்தி உருவம் பொதிக்கப்பட்டிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்
தற்போது உள்ள சந்தைப்படுத்தும் அரசியலே அரவை எதிர்ப்பதாகவும் பணத்தை வைத்து ஆட்சியைப் பிடிப்பதும் ஆட்சிக்கு வந்த உடன் பணத்தை சம்பாதிப்பதும் தான் 50 ஆண்டு அரசியல் களமாக உள்ளதாக அவர் பேசினார். முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மீதான ஊழல் வழக்கு விசாரிப்பது போல் தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான ஊழல் வழக்கு விசாரிக்க வேண்டும் எனவும், அமைச்சர் செந்தில் பாலாஜி அவர் சம்பந்தப்பட்ட வழக்கில் ஆதாரங்களை பணம் கொடுத்து கலைப்பதாகவும், திருடன் கொள்ளையடித்த பொருளை அதே இடத்தில் வைத்து விட்டால் தண்டனைக்கு தப்பிக்கலாம் என்பது போல் அவர் நடந்து கொள்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் அதிமுக திமுக பாஜகவுக்கு எதிராகவே அரசியல் செய்யப் போவதாகவும், ‘ஹிந்து என்றது விந்திய மாலைக்கு அப்பாற்பட்டு இருந்த இடத்திலிருந்து வந்தது. தமிழர்களுடைய கலாச்சாரம் வேறு, பண்பாடு வேறு. இங்கு சிறு தெய்வம், குலதெய்வம் வழிபாடு தான். மதத்தின் பெயரை வைத்து பாஜக பிரித்தால், அது சூழ்ச்சியில் ஈடுபடுவதாகும்.’ என்று அவர் கூறினார்.
மேலும் படிக்க | அதிமுக வேட்பாளரை முடிவு செய்வது யார்? உச்சநீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு
இந்து சமய அறநிலைத்துறை என்ற பெயரினை மாற்றி தமிழ் சமய அறநிலைத்துறை என்று வைக்க வேண்டும் என்று பழ கருப்பையா கோரிக்கை விடுத்துள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது பொதுமக்களை சுட்ட 13 காவலர்கள் குற்றம் செய்துள்ளதாக நீதிபதி அருணா ஜெகதீசன் கமிஷன் அறிக்கை வந்த பிறகு கூட, அவர்களின் மீது குற்ற நடவடிக்கை எடுக்காமல் துறை ரீதியான நடவடிக்கைகள் மட்டும் தமிழக அரசு எடுத்துள்ளதாகவும்,
ஜனநாயக நாட்டில், காவலர்கள் சுட்டுக் கொன்று விடுவார்கள் என்று போராடுவதற்கு கூட பயமாக உள்ளதாகவும் அவர் கூறினர். அதன் பின்பு ஆட்சியாளர்கள் 2 லட்சம் 5 லட்சம் நிவாரண நிதி உதவி அளிப்பார்கள் என அவர் சாடி உள்ளார். அமைச்சர் பொன்முடி வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்திற்கு தேசிய கொடிய கட்டிய காரில் சென்றதாகவும
திமுகவினர் தவறு செய்தால் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க மாட்டார் எனவும் அதனை மறைத்து விடுவார் என திமுக-வை அவர் விமர்சித்துள்ளார். தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் தற்போது ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை வேட்பாளருமான ஈ வி கே இளங்கோவன் தனது குடும்ப பாரம்பரியத்தையும் காங்கிரஸ் கட்சியின் கொள்கை கோட்பாடுகளை மறந்து திமுகவுக்கு சலாம் போட்டு இருப்பதாகவும் அதற்கு அவர் திமுகவில் இணைந்து கொள்ளலாம் எனவும் தற்போது உள்ள கூட்டணி கட்சிகள் திமுக எந்த தவறு செய்தாலும் அதனை விமர்சிப்பதில்லை எனவும் கூட்டணி வேறு கொள்கை வேறு என்பது உணர்ந்து செயல்படவில்லை எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். தனது 50 ஆண்டு அரசியல் பயணம் வீணாக சென்றதாகவும், தற்போது ஒரு புதிய பயணத்தை தொடர்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | ஈரோடு இடைத்தேர்தலில் ஒற்றை அணியாக திமுகவை எதிர்ப்போம்! டிடிவி தினகரன் கோரிக்கை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ