இந்தி தெரிந்தால் வேலையா? அப்போ இங்கே பானிபூரி விற்பவர்கள் யார்? அமைச்சர் கருத்து வைரல்

இந்தி படிதவர்கள் தமிழகத்தில் பானி பூரி விற்கிறார்கள் என இந்தி திணிப்பு குறித்து அமைச்சர் பொன்முடி சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார்.  

Written by - Shiva Murugesan | Last Updated : Dec 6, 2022, 04:50 PM IST
  • மக்களின் உணர்வுகளை ஆளுநர் புரிந்து கொள்ள வேண்டும்.
  • மூன்றாவது மொழியாக எதை வேண்டுமானாலும் படிக்கலாம்.\
  • இந்தியை கட்டாயமாக்கக்கூடாது.
இந்தி தெரிந்தால் வேலையா? அப்போ இங்கே பானிபூரி விற்பவர்கள் யார்? அமைச்சர் கருத்து வைரல் title=

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் 37 வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இப்பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு ஆளுநருமான ஆர்.என்.ரவி உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இந்த பட்டமளிப்பு விழாவில் 2 இலட்சத்து 4 ஆயிரத்து 569 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.

இதற்கு முன்னதாக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பேசும் போது, “நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. இந்திக்கு எதிரானவர்கள் அல்ல. விரும்புபவர்கள் எந்த மொழியை வேண்டுமானாலும் படிக்கலாம். இந்தி விருப்ப பாடமாக இருக்க வேண்டும். 

இந்தி கட்டாயம் என இருக்க கூடாது. சர்வதேச மொழி ஆங்கிலமும், உள்ளூர் மொழி தமிழும் இருக்கிறது. இந்த இரண்டு மொழிகள் தான் கட்டாயம். 

Minister Ponmudi

இந்தி படித்தவர்களுக்கு வேலை கிடைக்கும் என்றார்கள். ஆனால் கோவையில் பானிபூரி விற்பவர்கள் எல்லாம் யார்? அது ஒரு காலம். எந்த மொழியை கற்கவும் தயாராக உள்ளோம். மூன்றாவது மொழியாக எதை வேண்டுமானாலும் படிக்கலாம். இந்தியை கட்டாயமாக்கக்கூடாது.

மேலும் படிக்க | அபுதாபி விமான நிலையம்: பயணர்கள் வருகையில் ஏற்றம், முதலிடத்தில் இந்தியர்கள்

புதிய கல்விக் கொள்கையில் உள்ள நல்ல திட்டங்களை பின்பற்ற தயார். தமிழ்நாடு கல்விக் கொள்கையை நிறுவ முதலமைச்சர் குழு அமைத்துள்ளார். அதன் அடிப்படையில் அமைக்கப்படும் தமிழ்நாடு கல்விக் கொள்கையை தான் பின்பற்றுவோம். 

தமிழ்நாட்டின் பிரச்சனைகளை, மக்களின் உணர்வுகளை ஆளுநர் புரிந்து கொள்ள வேண்டும். அதனை மத்திய அரசிடம் தெரியப்படுத்த வேண்டும். இதனை ஆளுநர் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டார் என நினைக்கிறேன்” என அவர் தெரிவித்தார்.

Minister Ponmudi

இவரது இந்த பேச்சு இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இந்தி தெரிந்தால் வேலை கிடைத்துவிடும் என்று கூறினால், இதே தமிழகத்தில் பானி பூரி விற்கும் இளைஞர்களுக்கும் இந்தி தெரியுமே. ஏன் அவர்களுக்கு அரசு வேலை இல்லை? என்ற கேள்வி பல வருடங்களாக கேட்கப்பட்டு வருகிறது.

மேலும் பானி பூரி விற்பவர்கள் பற்றி கேலி செய்வதுபோல ஏற்கெனவே பல நூறு மீம்கள் இணையத்தில் தினசரி உலா வருகின்றன. அதுவும் இப்போது மேடை பேச்சுகளிலும் பானி பூரி விற்பவர்களை குறிப்பிட்டு பேச ஆரம்பித்து விட்டார்கள். இனி மீம்களும், இணைய வாக்குவாதங்களும் பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | துபாய் தமிழர்களுக்கு சூப்பர் செய்தி: விமான டிக்கெட் விலையில் பம்பர் தள்ளுபடி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News