கோவை வெள்ளியங்கிரி மலை ஏற்றத்துக்கான அனுமதி இன்றுடன் நிறைவு

கோவை வெள்ளியங்கிரி மலை ஏற்றத்துக்கான அனுமதி இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது. இதுவரை 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பக்தர்கள் சென்று சுவாமியை தரிசனம் செய்துள்ளனர்.

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : May 31, 2024, 10:04 AM IST
  • வெள்ளியங்கிரி மலை ஏற்றத்துக்கான அனுமதி இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது.
  • 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பக்தர்கள் சென்று சுவாமியை தரிசனம்.
கோவை வெள்ளியங்கிரி மலை ஏற்றத்துக்கான அனுமதி இன்றுடன் நிறைவு title=

கோவை வெள்ளியங்கிரி மலை ஏற்றத்துக்கான அனுமதி இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது. இதுவரை 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பக்தர்கள் சென்று சுவாமியை தரிசனம் செய்துள்ளதாக வனத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

வெள்ளியங்கிரி மலை:
வெள்ளியங்கிரி மலை ஒரு புனிதத் தலமாகவும் சுற்றுலாத்தலமாகவும் இருந்து வருகிறது. இது மேகங்கள் சூழ, வெள்ளி வார்ப்படத்தால் மூடியது போல தோற்றமளிப்பதால் "வெள்ளியங்கிரி" என்ற பெயர் பெற்றது. இம் மலையடிவாரம் பூண்டி என அழைக்கப்படுகிறது. இந்த அடிவாரப் பகுதியில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. சுமார் 3500 அடி உயரமுடைய இம்மலை ஏழு முடிகளைக் கொண்டுள்ளது. ஐந்தரை கிலோ மீட்டர் தூரம் செல்லும் இப்பாதையில் வெள்ளை விநாயகர் கோயில், பாம்பாட்டி சுனை, கைதட்டி சுனை, சீதைவனம், அர்ச்சுனன் வில், பீமன் களி உருண்டை, ஆண்டி சுனை போன்ற இடங்களை கண்டு மகிழ்ந்து செல்லலாம். ஏழாவது மலையின் உச்சியில் சிறிய சுயம்பு சிவன் கோவில் உள்ளது.

இந்நிலையில் கோவை பூண்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் வெள்ளியங்கிரி மலை உள்ளது. இங்கு உள்ள 7"வது மலையில் சுயம்புலிங்கம் கோவில் உள்ளது. சுயம்புலிங்கத்தை தரிசிப்பதற்காக பக்தர்கள் மலையேற்றம் செய்வது வழக்கம்.

மேலும் படிக்க | PVC ஆதார் அட்டை 5 நட்களில் வீடு வந்து சேரும்... விண்ணப்பிக்கும் முறை..!!

ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை மலை ஏற்றத்துக்கு வனத் துறையினர் அனுமதி அளிக்கின்றனர். இந்த ஆண்டு கடந்த பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி முதல் மலையேற பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் மலையேறி வந்தனர். 

சிவராத்திரி சித்ரா பவுர்ணமி நாட்களில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் குவிந்து தரிசனம் செய்தனர். வெள்ளியங்கிரி மலை ஏற்றத்துக்கு வனத் துறையினர் அளித்த அனுமதி இன்றுடன் நிறைவுபெறுகிறது. அதன் பிறகு மலையேற பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.

இதுதொடர்பாக கோவை மாவட்ட வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது., மலை உச்சியில் அருள்பாலிக்கும் வெள்ளியங்கிரி கோவிலுக்கு மலையேற்றம் செல்ல பக்தர்களுக்கு கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் அனுமதி அளிக்கப்பட்டது. அங்கு இதுவரை 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நேரடியாக சென்று சுவாமியை தரிசனம் செய்து விட்டு சென்று உள்ளனர்.

இதற்கு இடையே மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த பலத்த மழை காரணமாக அங்கு உள்ள 5"6"7"வது மலை உச்சியில் தற்போது கடும் குளிர் நிலவி வருகிறது. மேலும் கோவிலுக்கு செல்லும் மலைப் பாதைகள் சேதம் அடைந்த நிலையில் உள்ளன.

எனவே பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இன்று மே 31 ஆம் தேதி முதல் வெள்ளியங்கிரி மலையேற்றம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. இருந்த போதிலும் அவர்களில் 94 சதவீதம் பேர் வைப்பு தொகையை திரும்ப பெற்று விட்டனர்.

வெள்ளியங்கிரி மலைப் பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்ட போது அங்கு சுமார் 6 டன் அளவில் பிளாஸ்டிக் பொருட்களும் ஈரத் துணிகளும் சேகரித்து அப்புறப்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | சீனியர் சிட்டிசன்களிடம் இருந்து அரசு அதிக வருமான வரி ஈட்டுகிறதா? தெளிவான விளக்கம்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News