குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேசத்தை பாஜக ஆட்சி செய்துவரும் நிலையில், அதன் 2 முதலமைச்சர்களும் அவஅவர் தொகுதிகளில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.
காங்கிரஸ், தன் போக்கை மாற்றிக் கொள்ளாமல், இதே வேகத்தில் பயணிக்குமானால் ஏற்படும் வெற்று இடத்தை நிரப்பிட ஓர் அரசியல் சக்தி தேவைப்படுகிறது என்று காந்திய மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது. இந்த இயக்கத்தின் தலைவராக தமிழருவி மணியன் செயல்பட்டு வருகிறார்.
நேற்று வெளியான 5 மாநில தேர்தல் முடிவுகளில், உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம் ஆகிய 2 மாநிலங்களில் பாஜக அமோகமான வெற்றி பெற்றுது.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள 403 சட்டமன்ற தொகுதிகளில், பாஜக 325 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதன்மூலமாக, அக்கட்சி ஆட்சியமைப்பதும் உறுதியாகியுள்ளது. காங்கிரஸ், சமாஜ்வாடி கூட்டணி 54 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 19 இடங்களிலும் முன்னிலை பெற்றன.
உத்தரகாண்ட் மாநிலத்திலும் பாஜகவே முன்னிலை பெற்றது. அம்மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளில், பாஜக 57 இடங்களிலும், காங்கிரஸ் 11 இடங்களிலும் முன்னிலை பெற்றன.
நேற்று வெளியான 5 மாநில தேர்தல் முடிவுகளில், உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம் ஆகிய 2 மாநிலங்களில் பாஜக அமோகமான வெற்றி பெற்றுது. அதேசமயம் பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளது.
பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, நேற்று உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன.
பஞ்சாப் மாநில மக்கள் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெறச் செய்ததன் மூலம் தனக்கு மிகப்பெரிய பிறந்தநாள் பரிசை அளித்துள்ளதாக முதல்வர் வேட்பாளர் கேப்டன் அம்ரிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் சட்டசபைத் தேர்தலுக்கான முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 70க்கும் அதிகமான தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது.
பஞ்சாப் முடிவு நிலை 2:30 pm: காங்கிரஸ் 47 தொகுதிகளில் வெற்றி, 29 முன்னிலையாக வழிவகுக்கிறது. ஆம் ஆத்மி கட்சி 16, 5 முன்னிலையாக வழிவகுக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் கேப்டன் அமரீந்தர் சிங்குக்கு வாழ்த்து.
நடந்து முடிந்த 5 மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின்றன.
வாக்குகளை எண்ணும் பணி இன்னும் சிறிது நேரத்தில் தொடங்கவுள்ளது. வாக்கு எண்ணிக்கையை ஒட்டி 5 மாநிலத்திலும் பலத்த பாதுகாப்பு. தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் பாதுகாப்பு தீவிரம் -வாக்கு எண்ணிக்கை நடக்கும் மையங்களை சுற்றி 144 தடை
உபியில் 403, உத்தரகாண்ட் 70, பஞ்சாப் 117, கோவாவில் 40, மணிப்பூரில் 60 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது.
இந்திலையில் சற்று முன் கிடைத்த தகவலின் படி அதிமுக தொடர்ந்து முன்னிலை வகிப்பது மட்டுமல்லாமல் ஆட்சியையும் தக்க வைக்கிறது என்று தகவல் கிடைத்துள்ளது. இப்படி நடந்தால் ஜெயலலிதா புதிய சாதனை படைப்பார்.
அதாவது தமிழக சட்டசபை தேர்தல் வரலாற்றில் தொடர்ந்து ஆட்சியைத் தக்க வைத்த பெருமை எம்.ஜி.ஆர் மட்டும் சாரும். அவர் தொடர்ந்து மூன்று முறை ஆட்சியைத் தக்க வைத்துள்ளார். அந்த சாதனையை இதுவரை யாரும் முறியடித்ததில்லை.