பெட்ரோல்-டீசல் விலைக்கு ஒருநாள் விடுமுறை விட்ட மத்திய அரசு; மீண்டும் இன்று உயர்வு

நேற்று, ஞாயிற்றுக்கிழமை டீசல்-பெட்ரோல் விலையில் மாற்றம் எதுவும் செய்யவில்லை. ஆனால் இன்று மீண்டும் இரு எரிபொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 29, 2020, 08:49 AM IST
  • சென்னையில் மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை
  • தொடர்ச்சியாக 21 நாட்களுக்கு விலை உயர்வுக்கு பின்னர் நேற்று விலையில் மாற்றம் இல்லை.
  • இன்று இரு எரிபொருட்களின் விலையும் மீண்டும் அதிகரித்தது.
  • டீசல் விலை 13 பைசாவும், பெட்ரோல் விலையும் 5 பைசாவும் அதிகரித்து.
பெட்ரோல்-டீசல் விலைக்கு ஒருநாள் விடுமுறை விட்ட மத்திய அரசு; மீண்டும் இன்று உயர்வு title=

புது டெல்லி: டீசல்-பெட்ரோல் விலை (Petrol-Diesel price today) இன்னும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இன்றும் விலை உயர்ந்துள்ளது இருப்பினும், இந்த மாதத்தில் தொடர்ந்து 21 நாட்களாக பெட்ரோல் எரிபொருள் விலை தொடர்ந்து அதிகரித்த வந்த பின்னர், நேற்று, ஞாயிற்றுக்கிழமை அதன் விலையில் மாற்றம் எதுவும் செய்யவில்லை. ஆனால் இன்று மீண்டும் இரு எரிபொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. டீசல் 13 பைசா ஆகவும், பெட்ரோல் 5 பைசாகவும் விலை உயர்ந்துள்ளது.

தொடர்ந்து 21 நாட்களுக்கு விலைகளை அதிகரித்த பிறகு ஒரு நாள் நிவாரணம்:
இந்த மாதத்தில் தொடர்ச்சியாக 21 நாட்கள் எரிபொருள் விலை உயர்ந்துள்ளதை அடுத்து, எண்ணெய் நிறுவனங்கள் (Government oil companies in india) ஞாயிற்றுக்கிழமை விலை உயர்வில் இடைவெளி எடுத்தன. ஆனால் இன்று மீண்டும் விலை அதிகரிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் பெட்ரோல் (Petrol-Diesel price in Chennai) விலை 5 பைசா அதிகரித்து 83.63 ஆகவும், அதேபோல டீசல் விலை 13 பைசா அதிகரித்து 77.72 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

பிற செய்தியும் படிக்கவும் | இந்தியாவில் முதல் முறையாக பெட்ரோல் விலையை மிஞ்சும் டீசல்

டெல்லியில் (Petrol-Diesel price in Delhi) பெட்ரோல் விலை நேற்றைய ரூ .80.38 லிருந்து 5 பைசா அதிகரித்து ரூ .80.43 ஆக உயர்ந்துள்ளது. டீசலும் 13 பைசா உயர்ந்து ரூ .80.53 ஆக உயர்ந்தது. இங்கு டீசல் விலை நேற்று ரூ .80.40 ஆக இருந்தது. கடந்த சில நாட்களாக, பெட்ரோலை விட டீசல் விலை அதிகம் உள்ள நாட்டின் முதல் மாநிலமாக டெல்லி திகழ்கிறது.

மாநகரம் பெட்ரோல் டீசல்
சென்னை 83.63 77.72
புது டெல்லி 80.43 80.53
மும்பை 87.19 78.83
கொல்கத்தா 82.10 75.64

இந்த மாதத்தில் டீசல் ரூ.11.23 மற்றும் பெட்ரோல் விலை ரூ.9.17 என விலை உயர்வு:
சர்வதேச சந்தையில், இந்த மாதத்தின் பெரும்பகுதி, கச்சா எண்ணெயின் விலைகள் சற்று உயர்ந்து இருந்தன, ஆனால் உள்நாட்டு சந்தையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது, ​​இந்திய கச்சா எண்ணெயின் (Crude Oil) விலை பீப்பாய்க்கு $42 ஆக உயர்ந்து வருகிறது. ஆனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கிட்டத்தட்ட இந்த மாதத்தில் அதிகரித்துக்கொண்டே இருந்தது. இதன் விளைவு என்னவென்றால், டீசலின் விலை கடந்த 23 நாட்களில் லிட்டருக்கு ரூ .1123 அதிகரித்துள்ளது. இதே நாட்களில் பெட்ரோல் விலையும் லிட்டருக்கு ரூ .9.17 அதிகரித்துள்ளது.

பிற செய்தியும் படிக்கவும் | பெட்ரோல் - டீசல் விலையை தினம் உயர்த்தி வரும் போக்கை கைவிடுங்கள்

உங்கள் நகரத்தில் இன்றைய விலையை அறிந்து கொள்ளுங்கள்:
பெட்ரோல் - டீசல் விலை தினமும் மாறும் மற்றும் காலை 6 மணிக்கு புதுப்பிக்கப்படும். எஸ்எம்எஸ் மூலம் தினசரி பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நீங்கள் அறிந்து கொள்ளலாம் (How to check diesel petrol price daily). இந்திய எண்ணெய் வாடிக்கையாளர்கள் RSP  என டைப் செய்து 9224992249 க்கு அனுப்புவதன் மூலமும், பிபிசிஎல் நுகர்வோர் RSP  என டைப் செய்து 9223112222 என்ற எண்ணுக்கு SMS அனுப்பலாம். அதே நேரத்தில், HPCL நுகர்வோர் HP Price என டைப் செய்து 9222201122 என்ற எண்ணுக்கு SMS அனுப்புவதன் மூலம் விலையை அறிய முடியும்.

Trending News