9 அடியில் 1700 முறை பிரதமர் மோடியின் பெயரை பயன்படுத்தி ஓவியம் வரைந்து மாணவன் சாருகேஷ் சாதனை

PM Modi Birthday Art: பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை பயன்படுத்தி ஓவியம் வரைந்து பள்ளி மாணவன் சாதனை

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 19, 2022, 11:30 AM IST
  • ராமநாதபுரம் மாணவன் சாருகேஷின் கலைச் சாதனை
  • 9 அடியில் சுமார் 1700 முறை பிரதமரின் பெயரை பயன்படுத்தி ஓவியம் வரைந்து சாதனை
  • பிரதமருக்கு வித்தியாசமான பிறந்த நாள் பரிசு கொடுத்த தமிழக மாணவன்
9 அடியில் 1700 முறை பிரதமர் மோடியின் பெயரை பயன்படுத்தி ஓவியம் வரைந்து மாணவன் சாருகேஷ் சாதனை title=

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது ஓவியத்தை வரைந்து பள்ளி மாணவன் சாதனை படைத்துள்ளார். தனியார் பயிற்சி பள்ளியில் பயின்று வரும் மாணவன் சாருகேஷ் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை போற்றும் வகையில் 17 மணி நேரத்தில் அவர் பிறந்த மாதமான ஒன்பதாவது மாதத்தை நினைவு கூறும் வகையில், 9 அடியிலும் சுமார் 1700 முறை அவரது பெயரை பயன்படுத்தியும் ஓவியம் வரைந்து சாதனை படைத்துள்ளார்.

பள்ளி மாணவன் சாருகேஷ், இதற்கு முன்னர் சுதந்திர தினத்தன்று கல் உப்பால் பிரதமர் மோடியின் படம் வரைந்து சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவன் சார்கேஸ் தற்போது மீண்டும் பிரதமரின் உருவப்படத்தை வரைந்துள்ளார்.

அதிலும் இது சாதனை முயற்சியாக உள்ளது. பிரதமரின் பிறந்த நாளன்று, குஜராத்தில் பிறந்த திரு நரேந்திர மோதி அவர்களின் பெயரை பயன்படுத்தி ஓவியம் வரைந்து சாதனை படைத்துள்ளார்.

சாதனைகளை தொடர்ந்து செய்து வரும் பள்ளி மாணவன் சாருகேஷ் அனைவராலும் பாராட்டப்படுகிறார். அவரது பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் மாணவரை பாராட்டி வருகின்றனர். உண்மையில் 17 மணி நேரத்தில், செப்டம்பர் மாதத்தை நினைவு கூறும் வகையில், 9 அடியில் சுமார் 1700 முறை அவரது பெயரை பயன்படுத்தி ஓவியம் வரைந்தது பாராட்டக்கூடிய சாதனை தானே?

மேலும் படிக்க | சவுக்கு சங்கர் கைதுக்கு கடும் கண்டனம் தெரிவித்த தொல்.திருமாவளவன்!

மேலும் படிக்க | 7 கோடி மக்கள் இந்த நோயால் அவதி, 60 ரூபாய்க்கு மருந்து கிடைக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News