சேவையின் அடையாளம்தான் மோடியின் வாழ்க்கை - நண்பருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அமித் ஷா

சேவை மற்றும் அர்ப்பணிப்புக்கு அடையாளமாக மோடியின் வாழ்க்கை விளங்குவதாக உள்துறை அமைச்சரும், மோடியின் நண்பருமான அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

Written by - க. விக்ரம் | Last Updated : Sep 17, 2022, 04:22 PM IST
  • பிரதமர் மோடியின் 72ஆவது பிறந்தநாள் இன்று
  • அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்
  • மோடியின் வாழ்க்கை சேவையின் அடையாளம் என அமித் ஷா வாழ்த்து
சேவையின் அடையாளம்தான் மோடியின் வாழ்க்கை - நண்பருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அமித் ஷா title=

பிரதமர் மோடி இன்று தனது 72ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி அவருக்கு அரசியல் கட்சியினர் முதல் கட்சியினர்வரை பலரும் வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர். அந்தவகையில் மத்திய உள்துறை அமைச்சரும், மோடியின் உற்ற நண்பருமான அமித் ஷா தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டிருக்கும் வாழ்த்து செய்தியில், “இந்தியா முதலில் என்ற அணுகுமுறை, ஏழைகளின் நல்வாழ்வுக்கான உறுதி உள்ளிட்டவை மூலம் முடியாத பணிகளைக்கூட பிரதமர் மோடி சாத்தியமாக்கியுள்ளார்.

Modi

நல்ல நிர்வாகம்,வளர்ச்சி, தேசப்பாதுகாப்பு, வரலாற்றுச் சிறப்புமிக்க சீர்திருத்தங்கள் உள்ளிட்ட தொடர்ச்சியான முயற்சிகள் மூலம் இந்தியாவை முதன்மை நிலைக்குக் கொண்டு செல்வது என்ற உறுதிப்பாட்டை பிரதமர் மோடி நிறைவு செய்திருக்கிறார். அவரது தலைமையின் மீது மக்கள் வைத்துள்ள முழு நம்பிக்கை மட்டுமே இதனை சாத்தியமாக்கியுள்ளது. 

மேலும் படிக்க | PM Narendra Modi Birthday: பிரதமருக்கும் எண் 8-க்கும் உள்ள சம்பந்தம் என்ன?

சுதந்திரத்திற்குப் பின் முதல்முறையாக கோடிக்கணக்கான ஏழை மக்களுக்கு அவர்களின் உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களிடம் நம்பிக்கை உணர்வை மோடி நிலை நிறுத்தியுள்ளார். இன்று சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களும் மோடியுடன் உறுதியாக நிற்கிறார்கள். மோடியின் தொலைநோக்குப் பார்வை மற்றும் தலைமைத்துவத்தால் இன்றைய புதிய இந்தியா, உலகின் முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளது. 

 

உலக தலைவராக தனது அடையாளத்தை அவர் உருவாக்கி இருக்கிறார். இது உலகத்தால் மதிக்கப்படுகிறது. அவரது ஆரோக்கியத்திற்கும் நீண்ட வாழ்வுக்கும் நான் பிரார்த்திக்கிறேன். பாதுகாப்பான, வலுவான, தற்சார்புள்ள புதிய இந்தியாவை உருவாக்கியுள்ள மோடியின் வாழ்க்கை, சேவை மற்றும் அர்ப்பணிப்புக்கு அடையாளமாகவும் விளங்குகிறது.” என்றார்.

மேலும் படிக்க | சிறுத்தைகள் நாட்டிற்கு அர்ப்பணிப்பு - கூண்டை திறந்துவிட்டு ஃபோட்டோ எடுத்த பிரதமர் மோடி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News