PM Kisan விவசாயிகள் நலத்திட்டத்தில் ஊழல்: 13 மாவட்டங்களில் விசாரணை!!

விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள விவசாய நடவடிக்கைகளைத் தொடர உதவும் வகையில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜ்னா 2018 இல் நிறுவப்பட்டது.

Last Updated : Aug 14, 2020, 10:23 AM IST
  • PMKSNY மூலம் கிடைக்கும் லாபங்கள், 13 மாவட்டங்களில், விவசாயிகள் அல்லாதவர்களுக்கு விநியோகிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
  • மாவட்ட கலெக்டர் வேளாண் மற்றும் வருவாய் துறைக்கு ஒரு தனி விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
  • இந்த ஊழல் கடலூரில் மட்டுமல்லாமல், வடக்கு தமிழகத்தின் 12 மாவட்டங்களிலும் நடந்துள்ளதாக தெரிய வந்தது.
PM Kisan விவசாயிகள் நலத்திட்டத்தில் ஊழல்: 13 மாவட்டங்களில் விசாரணை!!  title=

திருச்சிராப்பள்ளி: விவசாயிகளின் நலத்திட்டமான பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜ்னா (PMKSNY) மூலம் கிடைத்த பிற லாபங்கள், 13 மாவட்டங்களில், விவசாயிகள் அல்லாதவர்களுக்கு விநியோகிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. வேளாண் முதன்மை செயலாளர் (Agriculture Secretary) கங்கந்தீப் சிங் பேடி விசாரணைக்கு உத்தரவிட்டு வியாழக்கிழமை அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுடன் வீடியோ மாநாடு மூலம் ஒரு சந்திப்பை நடத்தினார்.

விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள விவசாய நடவடிக்கைகளைத் தொடர உதவும் வகையில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜ்னா 2018 இல் நிறுவப்பட்டது. விவசாயிகளுக்கு அவர்களின் வங்கிக் கணக்குகளில் 6000 ரூபாய் நிதி மூன்று தவணைகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

இத்தகைய பின்னணியில், கடலூரில் (Cuddalore) விவசாயிகளாக இல்லாத சிலர், இந்த திட்டத்தின் நலன்களைப் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. திருவள்ளூர் மாவட்ட கலக்டரேட் மற்றும் சில இடைத்தரகர்கள். பயனாளிகளின் பட்டியலில் மற்றவர்களின் பெயர்களைச் சேர்ப்பதற்கான கட்டணமாக 1,000 ரூபாய் வாங்கி இந்தச் செயலைச் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ALSO READ: விவசாயிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு.. PMFBY-யில் பயிர் இழப்பு தகவல்களை வழங்குவது முக்கியம்!

இது ஒரு பெரிய சர்ச்சையை உருவாக்கியது. மாவட்ட கலெக்டர் வேளாண் மற்றும் வருவாய் துறைக்கு ஒரு தனி விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதில் இந்த ஊழல் கடலூரில் மட்டுமல்லாமல், வடக்கு தமிழகத்தின் 12 மாவட்டங்களிலும் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிய வந்தது.  அசல் பயனாளிகளைக் கண்டுபிடித்து, அவர்களுக்குத் திட்டத்தின் பயன்கள் போய் சேருவதை உறுதி செய்யுமாறும் மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார்.

1.79 லட்சம் பயனாளிகளில், 78,000 பேர் கோரோனா தொற்றுநோய் காலத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் 38,000 பேர் விவசாயிகள் அல்லாதவர்கள். இதேபோன்ற நிலை மற்ற மாவட்டங்களிலும் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக 13 மாவட்ட ஆட்சியர்களுடன் ஒரு சந்திப்பை நடத்திய ககந்தீப் சிங் பேடி, இந்த விஷயத்தில் நியாயமான விசாரணையை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

ALSO READ: பயிர்களுக்கு சிறந்த விலை, விவசாயிகளுக்கு ஒரு லட்சம் கோடி பரிசு: பிரதமர் மோடி அறிவிப்பு

Trending News