திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப் இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் நேற்று நாட்டறம்பள்ளி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது கேத்தாண்டப்பட்டி சஞ்சிவினூர் ஏரி கரை அருகே அடையாளம் தெரியாத 3 நபர்கள் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் நாட்றம்பள்ளி போலிசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று தேடுதல் பணியை மேற்கொண்டனர்.
அப்பொழுது போலிசாரை கண்டதும், கைது அச்சம் காரணமாக அந்த வாலிபர்கள் தப்பி ஓட முயன்ற போது. அவர்களை மடக்கி பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீஸார் விசாரணை செய்தனர்.
போலீஸார் நடத்திய விசாரணையில், வாணியம்பாடி அருகே அரப்பாண்டகுப்பம் மந்திரி வட்டம் பகுதியை சேர்ந்தவர் நால்வர் குறித்து தெரிய வந்தது.. பழனி இவரது மகன் சக்திவேல், வயது 24, தங்கம் மகன் பசுபதி, வயது 23 சிக்கணாங்குப்பம் டேங்க் வட்டம் பகுதியை சேர்ந்தவர்கள் சிவகுமார் மகன் அபினேஷ் வயது 19, குமரன் மகன் ரமேஷ், வயது 19 என்ற அடையாளம் தெரிய வந்தது. மேலும் இவர்களை சம்பவ இடத்தில் சோதனை செய்த போது இரும்புராடு, சிறிய கடப்பாரை, மிளகாய்ப்பொடி, ஆகியவை வைத்து கொண்டிப்பது தெரிய வந்தது. இதனை வைத்துக் கூட்டுக் கொள்ளை அடிக்க திட்டம் தீட்டிக் வந்ததாக தெரிவித்தனர்.
ALSO READ | சிறுமியை வன்புணர்வு செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை: மகிளா நீதிமன்றம் தீர்ப்பு
இது குறித்து நாட்டறம்பள்ளி போலிசார் வழக்கு பதிவு செய்து சக்திவேல் உள்பட 4 பேர் கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் மேலும் இவர்களிடமிருந்து இரும்பு ராடு கடப்பாரை மற்றும் மிளகாய் பொடி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
ALSO READ | கொரோனா அச்சம் காரணமாக குடும்பத்துடன் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி; இருவர் பலி!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR