புதுவையில் தீவிரமடையும் அரசியல் நெருக்கடி.. மேலும் ஒரு எம் எல் ஏ ராஜினாமா..!!!

புதுச்சேரி அரசியல் நெருக்கடி தீவிரமடைந்துள்ளது. அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்னதாக, மற்றொரு காங்கிரஸ் எம்.எல்.ஏ கட்சியை ராஜினாமா செய்தார். 

Written by - ZEE Bureau | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 21, 2021, 06:05 PM IST
  • புதுச்சேரி அரசியல் நெருக்கடி தீவிரமடைந்துள்ளது.
  • அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்னதாக, மற்றொரு காங்கிரஸ் எம்.எல்.ஏ கட்சியை ராஜினாமா செய்தார்.
புதுவையில் தீவிரமடையும் அரசியல் நெருக்கடி.. மேலும் ஒரு எம் எல் ஏ ராஜினாமா..!!!

புதுச்சேரி அரசியல் நெருக்கடி தீவிரமடைந்துள்ளது. அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்னதாக, மற்றொரு காங்கிரஸ் எம்.எல்.ஏ கட்சியை ராஜினாமா செய்தார். காங்கிரஸ் எம்.எல்.ஏ கே லட்சுமிநாராயணன் தனது ராஜினாமாவை சட்டமன்ற சபாநாயகர் வி.பி.சிவகோஜுண்டுவிடம் சமர்ப்பித்தார். இந்த ராஜினாமாவுக்குப் பிறகு, காங்கிரசுக்கு (Congress) பெரும்பான்மையை நிரூபிப்பது மிகவும் சவாலானதாக இருக்கும். 

வி நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பிப்ரவரி 22 அன்று மாலை 5 மணிக்குள் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆளும் கட்சி எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 13 ஆக குறைந்துள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 33 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில், ஆளும் மற்றும் எதிர்க்கட்சியின் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 14-14 ஆகும், இதில் மூன்று நியமன பாஜக (BJP) எம்.எல்.ஏக்கள் உள்ளனர். தற்போது ஐந்து இடங்கள் காலியாக உள்ளன. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 10 எம்.எல்.ஏக்கள் உள்ளனர், அதன் கூட்டணியான திமுகவிற்கு மூன்று எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அரசாங்கத்திற்கும் ஒரு சுயேச்சை எம் எல் ஏவின் ஆதரவு உள்ளது.

துணைஆளுநர் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்.ரங்கசாமி, அரசாங்கம் தனது பெரும்பான்மையை சபையில் நிரூபிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருவதாகவும், இதை அடுத்து, அரசு தனது பெருபான்மை வலுவை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் போது, முழுமையாக வீடியோ பதிவு செய்யப்படும் என்றும்  கூறப்பட்டுள்ளது.

ALSO READ | சமூக ஊடகங்களை முறைப்படுத்தும் சட்டத்தை கொண்டு வர அரசு திட்டம்: ராம் மாதவ்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

More Stories

Trending News