நீட் விவகாரத்தில் மக்களை ஏமாற்ற நினைக்கிறது திமுக - பொன்னையன் கடும் விமர்சனம்

திமுகவின் எம்பிக்களை கொள்ளை அடிப்பதற்கு பயன்படுத்தாமல் பாராளுமன்றத்தை முடக்கி நீட் தேர்வுக்கு விதிவிலக்கு பெற வேண்டும் என முன்னாள் அதிமுக அமைச்சர் பொன்னையன் பேட்டியளித்துள்ளார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 19, 2023, 04:15 PM IST
  • நீட் தேர்வுக்கு காரணமே திமுக தான்
  • மக்களை ஏமாற்ற நினைக்கிறார்கள்
  • பொன்னையன் கடும் குற்றச்சாட்டு
நீட் விவகாரத்தில் மக்களை ஏமாற்ற நினைக்கிறது திமுக - பொன்னையன் கடும் விமர்சனம் title=

அதிமுக மாநாட்டில் பங்கேற்பதற்காக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் அதிமுக மாநாடு நடைபெறும் நாளில் திமுக நீட்டுக்கு எதிராக போராட்டம் நடத்துவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், அவர்கள் திருடர்கள். திமுக ஆட்சியில் டெல்லியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த காந்திசெல்வன் தான் நீட்டுக்கு அனுமதி கொடுத்து சட்டமாக நிறைவேற்றியது. அப்போது காங்கிரஸ் அமைச்சரவையில் டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன், காந்தி செல்வன் உள்ளிட்டோர் இருந்தனர். தமிழக மக்கள் முட்டாள்கள், மறதியில் இருக்கிறார்கள், அவர்களை ஏமாற்றி விடலாம் என்று தப்பு கணக்கு போடுவதற்கு காரணம் திமுகவினர் பணபலம் மிக்கவர்களாக இருக்கின்றனர். 

மேலும் படிக்க | ஜோடிகளே உஷார்..! தனியார் விடுதியில் ரகசிய கேமரா-வசமாக சிக்கிய ஊழியர்!

அடிக்க அடிக்க அம்மியும் நகரும் என்கிற தத்துவத்தை போல பொய்யை சொல்லச் சொல்லி மக்களை முட்டாள் ஆக்கலாம் என்று நீட்டுக்கு எதிராக போராடலாம் என்று நினைக்கிறார்கள். மக்கள், இளைஞர்கள் மாணவர் சமுதாயம் அவர்களை ஏற்காமல் அவர்கள் முகத்தில் கறியை பூசுவார்கள். கச்சத்தீவு நேரத்தில் பிரபாகரனுக்கும், கருணாநிதிக்கும் ஆகாது. முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் விடுதலைப் புலிகளுக்கு எவ்வளவு நிதி உதவிகளை வழங்கினார்.  ஆனால் கருணாநிதி கொடுத்த கொஞ்ச நிதியையும் விடுதலை புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் திருப்பி எறிந்து விட்டார்கள். அதனால் அவர்கள் மீதான கோபத்தில் கச்சத்தீவை தாரை வார்த்து விட்டார் கருணாநிதி.

மக்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கி தான் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று தினகரன் கூறியிருப்பது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து தெரியாமல் கொள்ளையடித்த பணம் இருக்கிற காரணத்தால் பண திமிரில் அப்படிப்பட்ட பொய்யைச் சொல்கிறார். மாநாட்டிற்கு வருபவர்களிடம் நீங்களே நேரடியாக கேள்வி கேளுங்கள். திமுகவின் எம்பிக்களை கொள்ளை அடிப்பதற்கு பயன்படுத்தாமல் பாராளுமன்றத்தை முடக்கி நீட் தேர்வுக்கு விதிவிலக்கு பெற வேண்டும். அதிமுகவை பொறுத்த வரையில் நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் குரல் கொடுத்து வழக்கு தொடர்ந்தோம். 22 நாட்கள் பாராளுமன்றத்தை முடக்கியதில் இது முக்கியமான விஷயம்" என்றார்.

மேலும் படிக்க | சென்னை: ரூ. 500 கள்ள நோட்டு கொடுத்து ஏமாற்ற நினைத்த முதியவர் - உஷாரான வியாபாரி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News