கொரோனாவுக்கு 10,000 நிதி அளித்த யாசகரின் மனிதாபிமானத்துக்கு குவியும் பாராட்டு!!

தூத்துக்குடியை சேர்ந்த யாசகர் ஒருவர் கொரொனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு ரூ.10 ஆயிரத்தை நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். சமூக ஊடகங்களில் அவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. 

Last Updated : May 18, 2020, 07:19 PM IST
கொரோனாவுக்கு 10,000 நிதி அளித்த  யாசகரின் மனிதாபிமானத்துக்கு குவியும் பாராட்டு!! title=

மதுரை: உலகமே கொரொனா தொற்றுநோயை எதிர்து போராடி வருகிறது. பல நாடுகள் அந்நாட்டு மக்களிடம், கொரொனாவுக்கு (Coronavirus) எதிரான போராட்டத்திற்கு நிதியுதவி தந்து உதவுமாறு கேட்டுக்கொண்டு உள்ளது. அதேபோல நமது நாட்டிலும் பிரதமர் இதே வேண்டுகோளை மக்களிடம் வைத்தார். PM Cares -க்கு தங்களால் முடிந்த அளவுக்கு நிதியுதவி செய்யுமாறு கூறியிருந்தார். இதனையடுத்து, நாட்டில் தொழில் அதிபர் தொடங்கி வேலை பார்க்கும் ஊழியர்கள் வரை பலர் நிதியுதவி அளித்தனர்.

மேலும் படிக்க: அதிர்ச்சி... கொரோனா வைரஸ் தொற்றுக்கான புதிய அறிகுறி கண்டுபிடிப்பு..

அதேபோல தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கொரொனாவுக்கு (Covid-19) எதிரான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள, மக்கள் தங்கள் பங்களிப்பாக நிதி உதவி அளிக்க வேண்டும் என மக்களிடம் கோரிக்கை வைத்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கையை அடுத்து பொதுமக்கள் தொடங்கி பலர் தங்களால் முடிந்த நிதியை முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்தனர்.

அதுமட்டுமில்லாமல், சிலர் மகன், மகள் கல்வி மற்றும் திருமணத்திற்கு சேர்த்து வைத்த பணத்தை கொரொனா நிதியாக அளித்துளனர். சிறு குழந்தைகள் கூட, தங்கள் உண்டியில் சேமித்து வைத்த பணத்தை நன்கொடையாக அளித்து, அனைவரின் பாராட்டை பெற்றனர். 

மேலும் படிக்க: ஆண் Vs பெண் ஆணுறைகள்: எது மிகவும் பயனுள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்..

அதேபோன்ற ஒரு சம்பவம் இன்று மதுரையில் நடந்துள்ளது. அதாவது தூத்துக்குடி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த பூல்பாண்டி என்ற முதியவர் ஒருவர், தனது மாவட்டத்தை சுற்றி உள்ள பல மாவட்டங்களில் உள்ள புன்னிய ஸ்தலங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளுக்கு சென்று யாசகம் பெற்று வருகிறார். 

அப்படி கிடைக்கும் பணத்தை, அவரின் செலவு போக, மீதி பணத்தை சேர்த்து வைத்துள்ளார். அந்த பணத்தை ஏழைக் குழந்தைகளின் கல்வி செலவுக்காகவும், ஆதரவற்ற இல்லங்களுக்கும் கொடுத்து உதவி வருகிறார்.

அந்தவகையில், இன்று மதுரை ஆட்சியரை சந்தித்து கொரொனா நிவாரண நிதியாக (Corona Relief Fund) பத்தாயிரம் ரூபாய் நன்கொடையாக அளித்துள்ளார். அவரின் மனிதாபிமானத்தை பார்த்து பலர் பாராட்டி வருகின்றனர். 

Trending News