ஆகஸ்ட் 3 திங்கட்கிழமை சென்னையின் சில பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் என்று தமிழக மின்சார உற்பத்தி மற்றும் விநியோகக் கழகம் (TANGEDCO) அறிவித்துள்ளது. திங்கட்கிழமை இந்த பகுதிகளில் பராமரிப்பு பணிகளுக்காக காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஐந்து மணி நேரம் மின்சாரம் தடை செய்யப்படும். இருப்பினும், மதியம் 2 மணிக்கு முன்னர் பராமரிப்பு பணிகள் முடிந்தால், TANGEDCO மின்சாரத்தை உடனடியாக வழங்கும். சென்னையின் (Chennai) செலையூர் மற்றும் தொண்டையார்பேட்டை பகுதிகளில் மின்சாரம் தடைபடும்.
சேலையூரில் பின்வரும் பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படும்:
கண்ணன் நகர், ஐஓபி காலனி, பொன்னியம்மன் கொயில் தெரு, செலையூர், கர்ணம் தெரு, ராஜா ஐயர் தெரு, ரங்கநாதன் தெரு, முத்தாலம்மன் தெரு, வேளச்சேரி பிரதான சாலையின் ஒரு பகுதி, ஏழுமலை தெரு, புதிய பாலாஜி நகர், முல்லை தெரு , அவ்வை தெரு, பாரதி நகர், பஜனை கோயில் தெரு, மாதா கோயில் தெரு, பாலயத்தான் தெரு, ரங்கநாதன் நகரின் ஒரு பகுதி, பர்மா காலனி ஹேரிங்டன் சாலை, ஈஸ்வரன் கொயில் தெரு மற்றும் ராமசாமி தெரு.
தொண்டையார்பேட்டையில், பின்வரும் பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படும்: கார்னேஷன் நகர், TNSCB குடியிருப்பு, ஜே.ஜே.நகர், சுதந்திராபுரம், சிகிராந்தபாளயம், மோட்சபுரம், கே.எச். சாலை, மீனாம்பாள் நகர், பாரதி நகர், பாரதி நகர் குடியிருப்பு, காமராஜர் நகர், நியூ ஷாஸ்திரி நகர், ஜீவா நகர், டிரைவர் காலனி, ஈ.எச் சாலை மற்றும் தியாகப்பா செட்டி தெரு.
மத்திய மின் அமைச்சகத்தின் கீழுள்ள மத்திய மின்சார ஆணையத்தின் மின்சுமை உற்பத்தி சமநிலை அறிக்கையின்படி, 2020-2021 ஆம் ஆண்டிற்கான மின் உபரி இருக்கக்கூடிய நாட்டின் சில மாநிலங்களில் தமிழகம் உள்ளது. இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, கோவா, ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா, சிக்கிம், அருணாச்சல பிரதேசம், மேகாலயா, மிசோரம் மற்றும் திரிபுரா ஆகியவை பிற மாநிலங்களில் அடங்கும்.
ALSO READ: தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு.... ஒரே நாளில் 99 பேர் பலி...
தமிழகத்தின் ஒட்டுமொத்த தேவை 1,17,111 மில்லியன் யூனிட்களாகவும், அதன் கிடைக்கும் அளவு 1,25,117 மில்லியன் யூனிட்டுகளாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அறிக்கை கூறுகிறது. எனவே உபரி 8,006 மில்லியன் யூனிட்டுகளாக இருக்கும்.
லாக்டௌன் காரணத்தால், மாநிலத்தில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்காக திட்டமிடப்பட்ட பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.