சாதித்த டொனால்ட் டிரம்ப், சரித்திரம் படைத்த பிட்காயின்: கொண்டாடும் கிரிப்டோகரன்சி சந்தை

Donald Trump: டொனால்ட் டிரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது பிட்காயினை மையப் புள்ளியாக ஆக்கினார். அமெரிக்காவை "உலகின் கிரிப்டோ தலைநகராக" மாற்றுவேன் என்று அவர் கூறினார். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 6, 2024, 03:35 PM IST
  • டொனால்ட் டிரம்ப் வெற்றிக்கும் கிரிப்டோகரன்சிக்கும் உள்ள தொடர்பு என்ன?
  • கிரிப்டோகரன்சி சந்தையில் திடீர் மகிழ்ச்சி ஏன்?
  • இங்கே காணலாம்.
சாதித்த டொனால்ட் டிரம்ப், சரித்திரம் படைத்த பிட்காயின்: கொண்டாடும் கிரிப்டோகரன்சி சந்தை title=

Donald Trump: இந்த ஆண்டு உலகமே மிகவும் ஆர்வமாக எதிர்பார்த்த நிகழ்வு அமெரிக்க அதிபர் தேர்தல். இந்த தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றியை நெருங்கி வரும் நிலையில், பல்வேறு துறைகளில் டிரம்ப் வெற்றிக்கான தாக்கம் இப்போதே தெரியத் தொடங்கியுள்ளது. முக்கியமாக இந்த தேர்தல் முடிவுகள் கிரிப்டோகரன்சி துறையில் முதலீட்டாளர்களின் உற்சாகத்தை தூண்டி, பிட்காயின், 75,060 டாலர் என்ற சாதனை அளவை எட்டியது. உலகின் மிக அதிக மதிப்புமிக்க டிஜிட்டல் அசெட், செவ்வாய் அன்று மட்டும் (அமெரிக்க நேரம்) 7 சதவீத வளர்ச்சியைக் கண்டது.

டொனால்ட் டிரம்ப் வெற்றிக்கும் கிரிப்டோகரன்சிக்கும் உள்ள தொடர்பு என்ன? கிரிப்டோகரன்சி சந்தையில் திடீர் மகிழ்ச்சி ஏன்? இங்கே காணலாம்.

தேர்தல் பிரச்சாரத்தில் இடம்பெற்ற பிட்காயின்

டொனால்ட் டிரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது பிட்காயினை மையப் புள்ளியாக ஆக்கினார். அமெரிக்காவை "உலகின் கிரிப்டோ தலைநகராக" மாற்றுவேன் என்று அவர் கூறினார். இது கிரிப்டோ முதலீட்டாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அளித்தது. தேர்தல் முடிவுகள் வெளிவந்து டொனால்ட் டிர்ம்ப் முன்னிலை வகிக்கும் செய்திகள் வரத்தொடங்கியவுடன் கிரிப்டோ சந்தையில் நல்ல ஏற்றத்தைக் காண முடிந்தது. பிட்காயின் ஒரு புதிய சாதனை செய்து $75,000 க்கு மேல் எட்டியது. இது கிட்டத்தட்ட $1.5 டிரில்லியன் மதிப்பீட்டை தாண்டியது.

புதன்கிழமை (இந்திய நேரப்படி), பிட்காயின் ஒரு நாணயத்திற்கு $73,000 ஆக இருந்தது. டிவேர் குழுமத்தின் (deVere Group) தலைமை நிர்வாக அதிகாரி நைகல் கிரீன், ‘அரசியல் மற்றும் கிரிப்டோகரன்சியின் இணைப்புப்புள்ளி, சந்தை போக்குகளை வடிவமைப்பதில் முக்கிய வரையறுக்கும் பாத்திரத்தை வகிக்கும்.’ என தெரிவித்துள்ளார்.

"கிரிப்டோகரன்சி குறித்த டிரம்பின் நிலைப்பாடு, தேர்தலைச் சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மையுடன் இணைந்து, பிட்காயினை புதிய உயரத்திற்குத் தள்ளும் என்று நாங்கள் பல மாதங்களாக கூறி வருகிறோம்," என்று அவர் கூறினார்.

மேலும் படிக்க | US elections: அமெரிக்க தேர்தலில் டிரம்ப் வெற்றியா? உண்மை நிலவரம் என்ன?

"இந்த அதிகரிப்பு தேர்தலைப் பற்றியது மட்டுமல்ல; இது டிஜிட்டல் நிதி அமைப்பில் நிகழும் அடிப்படை மாற்றங்களைப் பற்றியது. இதில் பிட்காயின் தலைமை இடத்தில் உள்ளது. பாரம்பரிய அமைப்புகளில் ஏற்படும் மாற்றங்களை மக்கள் கவனித்து ஒப்புக்கொள்ளத் தொடங்கி இருக்கிறார்கள்” என்று கிரீன் மேலும் கூறினார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது, டிரம்ப், “கிரிப்டோகரன்சி துறை பாதிப்புகளுக்கு ஆளாக்கப்படுவதை நிறுத்தப்போவதாகவும், அமெரிக்காவை "உலகின் பிட்காயின் வல்லரசாக" மாற்றவுள்ளதாகவும்” சபதம் செய்தார்.

"கிரிப்டோகரன்சிக்கான டிரம்பின் வெளிப்படையான ஆதரவு இந்த எழுச்சியைத் தூண்டியுள்ளது, ஏனெனில் டிரம்ப் வெற்றியானது பிட்காயினின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு சாதகமான மற்றும் அவசியமான முக்கிய அம்சமாக இருக்கும். என முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். இது மிகவும் தேவையான மற்றும் அனைவருக்கும் பயனுள்ள ஒரு முன்னேற்றமாக இருக்கும்” என்று கிரீன் வாதிட்டார்.

வர்த்தக ஆய்வாளர்கள், டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் உயர்ந்த தேவை, சந்தை உணர்வு மற்றும் கொள்கை எதிர்பார்ப்புகள் ஆகியவற்றால் பிட்காயின் எதிர்காலத்தில் $80,000 வரை உயரக்கூடும் என நம்புகிறார்கள்.

"$80,000 இல் உள்ள பிட்காயின் வெகு தொலைவில் இல்லை. சந்தை இயக்கவியலின் சரியான எழுச்சியை நாம் இப்போது கண்டுகொண்டு இருக்கிறோம்” என்று கிரீன் கூறினார்.

இதற்கிடையில், மற்ற கிரிப்டோகரன்சி டோக்கன்களும் நல்ல உயர்வை கண்டன. மொத்த கிரிப்டோ மார்க்கெட் கேப் ஒரே நாளில் 9 சதவீதம் உயர்ந்தது.

மேலும் படிக்க | Donald Trump: மீண்டும் அமெரிக்க அதிபராகும் டிரம்ப்... இந்தியாவுக்கு சாதக, பாதகங்கள் என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News