தமிழர்களுக்கு தமிழில் புத்தாண்டு வாழ்த்து கூறிய பிரதமர்..!

தமிழ் புத்தாண்டையொட்டி பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழர்கள் விருப்பங்களும், விழைவுகள் அனைத்தும் ஈடேற வேண்டுவதாக தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Updated: Apr 14, 2018, 08:39 AM IST
தமிழர்களுக்கு தமிழில் புத்தாண்டு வாழ்த்து கூறிய பிரதமர்..!
ZeeNewsTamil

தமிழ் புத்தாண்டையொட்டி பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழர்கள் விருப்பங்களும், விழைவுகள் அனைத்தும் ஈடேற வேண்டுவதாக தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இன்று சித்திரை திருநாளான, தமிழ் புத்தாண்டு தினத்தைக் கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி தமிழகம் முழுவதும் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பல அரசியல் தலைவர்கள் தங்களது தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

இது தொடர்பாக வாழ்த்து தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, உலகின் மூத்தகுடி எனும் பெருமை கொண்ட தமிழ் மக்களுக்கு, இனிமையும் மகிழ்ச்சியும் பொங்கட்டும், நலமும் வளமும் பெருகட்டும் என புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, பாரத பிரதமர் மோடி தனது ட்விட்டரில் பக்கத்தில் தமிழர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்தை தமிழில் தெரிவித்துள்ளார். 

அதில், அவர் கூறி இருப்பதாவது....!   

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். வரும் ஆண்டில் தமிழர்கள் விருப்பங்களும் விழைவுகள் அனைத்தும் ஈடேற வேண்டுகிறேன் என அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.