அரிவாள் வாங்க ஆதார் கார்டு! காவல் துறையின் புதிய நடவடிக்கை!

கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் வாங்குவோரின் தகவல்களை சேகரிக்க வேண்டும் என்று விற்பனையாளர்களுக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 30, 2021, 02:23 PM IST
அரிவாள் வாங்க ஆதார் கார்டு!  காவல் துறையின் புதிய நடவடிக்கை!  title=

தமிழகத்தில் சமீபகாலமாக குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.  இதனை தடுக்கும் வகையில் சமீபத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட ரவுடிகள் இரவோடு இரவாக கைது செய்யப்பட்டனர்.  அவர்களிடமிருந்து பல்வேறு ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது.  தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தமிழக காவல்துறை பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. 

இதன் தொடர்ச்சியாக தற்போது காவல் துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்விரோத கொலை சம்பவங்களை தொடர்ந்து மாநில அளவில் எடுக்கப்பட்ட "ஆப்பரேஷன் டிஸ்ஆர்ம்" என்னும் தேடுதல் வேட்டையில் சுமார் 3325 கொலை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 1110 கத்திகள் மற்றும் 7 கள்ளத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.  கத்தி, வீச்சரிவாள் போன்றவற்றை தயார் செய்யும் உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் அனைவரையும் காவல் நிலைய உட்கோட்ட அளவில் அழைத்து கூட்டங்கள் நடத்தப்பட்டது.  இவ்வாறு மொத்தம் 579 கூட்டங்கள் நடத்தப் பட்டது 2548 அவர்கள் கலந்துகொண்டு காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக தெரிவித்துள்ளனர். 

இதன் தொடர்ச்சியாக கத்தி, வாள், வீச்சரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் தயாரிப்பை கண்காணிக்கவும், இது போன்ற ஆயுதங்களை தவறானவர்கள் கைகளுக்கு செல்வதை கட்டுப்படுத்தவும் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு காவல் ஆணையர் களுக்கும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் கீழ்க்காணும் நடவடிக்கைகளை எடுக்க அறிவித்துள்ளார்.

sylendrababu

* அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் தயாரிப்பவர்கள், தயாரிக்கும் இடங்களை கண்டறிய வேண்டும். 

* அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களை வாங்குபவரின் பெயர், முகவரி, தொலைபேசி எண், என்ன காரணத்திற்காக வாங்குகிறார்கள் போன்றவற்றை பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். 

* விவசாயம், வீட்டு உபயோகம் இல்லாமல் மற்ற காரணங்களுக்காக கத்தி போன்ற ஆயுதங்களை அடையாளம் தெரியாதவர்களிடம் விற்பனை செய்யக்கூடாது.

* கண்காணிப்பு கேமராக்களை கடை மற்றும் பட்டறைகளில் பொருத்தப்பட வேண்டும்.  கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது சிரமம் ஏற்பட்டால் காவல்துறை உதவி செய்ய வேண்டும்.

*குற்றவாளிகள் பற்றிய தகவல்களை காவல்துறைக்கு தெரிவிப்பவர்களுக்கு தக்க வெகுமதி வழங்க வேண்டும் போன்ற அறிவுரைகளை காவல்துறை தலைமை இயக்குனர் மற்ற காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

ALSO READ ரவுடிகளை அடக்குவதில் ஜெயலலிதாவைப் போல் செயல்படுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்: செல்லூர் ராஜு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News