இன்று ஆர்.கே.நகர் மக்களை சந்திக்கிறார் முதல்வர் ஜெயலலிதா:

Last Updated : Jun 6, 2016, 11:49 AM IST
இன்று ஆர்.கே.நகர் மக்களை சந்திக்கிறார் முதல்வர் ஜெயலலிதா: title=

ஆர்.கே.நகரில் இன்று சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தன்னை வெற்றி பெறச்செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார். 

நடந்து முடிந்த தேர்தலில் ஆர்.கே.நகரில் தொகுதியில் அம்மா அவர்கள் வெற்றி பெற்று 6-வது முறை தமிழக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏற்கனே கடந்தாண்டு இத்தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்ட ஜெயலலிதா வெற்றி பெற்றார். தான் 2 முறை வெற்றிப்பெற்றதை அடுத்து ஓட்டு போட்ட ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க பயணம் மேற்கொண்டு பல்வேறு இடங்களில் வாக்காளர்களை சந்தித்து நன்றி கூறுகிறார்.

எம்.ஜி.ஆர். சிலை பெட்ரோல் பங்க், காசிமேடு, சூரிய நாராயண செட்டி தெரு, ஜீவரத்தினம் சாலை, சூரியநாராயண செட்டி தெரு, வீரராகவன் ரோடு, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, கிராஸ் ரோடு, அருணாச்சலேஸ்வரர் கோவில் தெரு, காமராஜர் காலனி தெரு, சேனியம்மன் கோயில் தெரு, மார்க்கெட் தெரு, வ.உ.சி. சாலை சந்திப்பு, வைத்தியநாதன் பாலம், வைத்தியநாதன் பாலம், எண்ணூர் நெடுஞ்சாலை சந்திப்பு, ஜெ.ஜெ. நகர் சந்திப்பு, வைத்தியநாதன் பாலம், திருவொற்றியூர் நெடுஞ்சாலை சந்திப்பு ஆகிய இடங்களுக்கு செல்வதாக கூறப்பட்டுள்ளது.

ஆர்கே.நகருக்கு முதல்வர் ஜெயலலிதாவை வரவேற்க கட்சியினர் கோலாகல ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

டுவிட்டர் பக்கத்தில்:-

 

 

Trending News