இன்றைய வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மழை!!

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

Last Updated : Jul 14, 2019, 03:10 PM IST
இன்றைய வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மழை!! title=

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

வெப்பச்சலனம் காரணமாகவும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாகவும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதில், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும், நகரின் சில இடங்களில் மாலை, இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ், குறைந்த பட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகக்கூடும். தமிழக கடற்கரைப் பகுதிகளில் தென்மேற்கு திசை நோக்கி 35 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். கடந்த 24 மணிநேரத்தில் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியில் 8 சென்டி மீட்டர், திருத்தணியில் 6 சென்டி மீட்டர், வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் 5 சென்டி மீட்டர், தர்மபுரி மாவட்டத்திலும் வேலூர் காவேரிப்பாக்கத்திலும் தலா 4 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

 

Trending News