தான் அரசியலில் ஈடுபடுவது உறுதி என்றும், 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப் போவதாகவும் நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். இவரின் கருத்துக்கு ஆதரவுகளும், எதிர்ப்புகளும் தொடர்ந்து எழுந்து வருகிறது.
இன்று செய்தியாளர்களிடம் ஆன்மிக அரசியலை குறித்து ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.
இன்று தனது போயஸ் கார்டன் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார். அப்பொழுது ஆன்மிக அரசியல் என்றால் என்ன? என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் கூறியது, சாதி, மதம் அனைத்தையும் கடந்து உண்மையாக, நேர்மையாக, நாணயாமாக அரசியலில் ஈடுபடுவதையே ஆன்மிக அரசியல் என்று குறிப்பிட்டேன் எனக் கூறினார்.
மேலும் கட்சி மற்றும் கட்சியின் சின்னம் குறித்த கேள்விக்கு..பொறுத்திருங்கள் அதற்கான பதில் விரைவில் கிடைக்கும் எனவும் கூறினார்.