7 பேர் விடுதலை விவகாரத்தில் புதிய திருப்பம் :அடுத்தது என்ன?

7 பேர் விடுதலைக்கு எதிராக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் புதிய மனுவை தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 17, 2018, 04:05 PM IST
7 பேர் விடுதலை விவகாரத்தில் புதிய திருப்பம் :அடுத்தது என்ன? title=

மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன், நளினி உட்பட 7 பேர் சிறையில் கடந்த 25 ஆண்டுகளாக உள்ளனர். அவர்களை 
விடுதலை செய்வது தொடர்பான வழக்கில், தமிழக அரசே முடிவு செய்யலாம் என உச்சநீதிமன்றம் சமீபத்தில் (செப்டம்பர் 7) தெரிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து கடந்த செப்டம்பர் 9-ஆம் நாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறை தன்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுவிக்க தமிழக ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்படும் என முடிவெடுக்கப்பட்டது. பின்னர் தமிழக ஆளுநருக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டது. 

ஆனால் தமிழக ஆளுநர் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைகுறித்து அமைதி காத்து வருகின்றார். இதற்கிடையில் 7 பேர் விடுதலை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தமிழக ஆளுநர் விளக்கம் கேட்டுள்ளார் என செய்திகள் பரவின. இதற்க்கு ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்தது. அதில் உள்துறை அமைச்சகத்திற்கு 7 பேரின் விடுதலைகுறித்து எந்த அறிக்கையும் அனுப்பப்படவில்லை. 7 பேரின் விடுதலை குறித்து அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு, நியாயமாக முடிவு எடுக்கப்படும். இவ்வழக்கு தொடர்பாக தீர்ப்புகள் உள்ளிட்ட ஏராளமான ஆவணங்கள் தமிழக அரசிடமிருந்து பெறப்பட்டன. இந்த ஆவணங்கள் அனைத்தும் கவனமாகவும், நுட்பமாகவும் ஆய்வு செய்யப்பட்டு, அரசமைப்புச் சட்டத்திற்கு இணக்கமாக, நேர்மையாகவும் நியாயமாகவும் முடிவு எடுக்கப்படும் என ஆளுநர் மாளிகை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட போது, அருகில் இருந்த 14 பேரும் பலியாகினர். இவர்களின் குடும்பம் 7 பேரின் விடுதலைக்கு ஆரம்ப முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நளினி உட்பட 7 பேரை விடுதலை செய்யக்கூடாது என நீதிமன்றத்திடம் முறையிட்டனர். 

இந்நிலையில், ராஜீவ் காந்தி படுகொலையின் போது பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து மூன்று வாரத்திற்கு பிறகு புதிய மனுவை தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Trending News