15:10 | 05-08-2018
திரு கருணாநிதி அவர்களைச் சென்னையில் சந்தித்தேன். அவர்களின் குடும்பத்தார் மற்றும் மருத்துவரிடம் அவருடைய உடல்நலம் குறித்து கேட்டறிந்தேன். தமிழ்நாடு முன்னாள் முதல்வரும் முதுபெரும் தலைவருமான கலைஞர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என தனது ட்விட்டர் பக்கத்தில் குடியரசு தலைவர் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
திரு கருணாநிதி அவர்களைச் சென்னையில் சந்தித்தேன். அவர்களின் குடும்பத்தார் மற்றும் மருத்துவரிடம் அவருடைய உடல்நலம் குறித்து கேட்டறிந்தேன். தமிழ்நாடு முன்னாள் முதல்வரும் முதுபெரும் தலைவருமான கலைஞர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். - குடியரசு தலைவர் கோவிந்த் pic.twitter.com/SIcadbrUgg
— President of India (@rashtrapatibhvn) August 5, 2018
15:07 | 05-08-2018
சென்னை காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோரிடம் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நலம் விசாரித்தார்!!
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்னை வந்தார்!!
வயது முதிர்வு மற்றும் உடல் நிலை சோர்வு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் கடந்த ஜூலை 27-ஆம் நள்ளிரவில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.
இதையடுத்து, காவிரி மருத்துவமனையில் மருத்துவ கண்கானிப்பில் இருக்கும் திமுக தலைவர் கருணாநிதி அவர்களை தலைவர்கள் பலரும் சந்தித்து வருகின்றனர். தலைவர்கள் பொதுமக்கள் என பலரும் கருணாநிதி உடல் நலம்பெற வேண்டும் என பிராத்தனை செய்து வருகின்றனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி அவர்களின் உடல்நிலை குறித்து கேட்டறிய தலைவர்கள் பலரும் மருத்துவமனைக்கு படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், குடியரசுத் துணை தலைவர் வெங்கய்யா நாயுடு அவர்கள், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்கள், மலேசியா சட்டமன்ற உறுப்பினர், தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலர், தமிழ் திரையுலக நடிகர்கள், கேரளா முதல்வர் பினராயி விஜயன் என பலரும் சென்னை காவேரி மருத்துவமனைக்கு வருகை புரிந்து கலைஞர் கருணாநிதி அவர்களின் உடல்நலம் குறித்து கேட்றிந்தனர்.
இதையடுத்து, திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க காவிரி மருத்துவமனைக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்னை விமான நிலையத்திலிருந்து வந்துகொண்டிருக்கிறார். சென்னை விமான நிலையத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை ஆளுநர் பன்வாரிலால், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், சபாநாயகர், அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் கிரிஜா உள்ளிட்டோர் வரவேற்றனர்.
குடியரசு தலைவர் வருகையை ஒட்டி காவிரி மருத்துவமனையில் ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது!