தமிழகத்தில் உள்ள தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை!!
சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை மாவட்டங்களில் நாளை அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுவையில் நாளை அதிதீவிர மழை பெய்யும் என ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்திருக்கிறது இந்திய வானிலை மையம். வானிலை மையம் விடுத்துள்ள ரெட் அலர்ட் எச்சரிக்கைப்படி ஒரே நாளில் 22 செ.மீ மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள வானிலை முன்னெச்சரிக்கை குறிப்பில், தமிழகம், புதுவையில் நாளை அதிதீவிர மழை பெய்யும் என ரெட் அலர்ட் விடுத்துள்ளது. தமிழகத்தில் நாளை பெரும்பாலான இடங்களில் மிகமிக பலத்த மழை பெய்யும் என்கிறது அந்த எச்சரிக்கை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் ஒரே நாளில் 22 செ.மீ மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், ஒட்டுமொத்த தமிழகத்திற்கு இது பொருந்தாது. ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், இந்த நான்கு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில், 21 சென்டி மீட்டர் அல்லது அதற்கும் அதிக மழை பெய்ய வாய்ப்பிருப்பது குறிப்பிடத்தக்கது.