அம்பேத்கர் சிலைக்கு காவி துண்டு: விசிகவினர் சாலை மறியல்

காஞ்சிபுரம் அருகே அம்பேத்கர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்த மர்ம நபர்களை கைது செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 12, 2022, 02:03 PM IST
  • அம்பேத்கர் சிலைக்கு காவித்துண்டு
  • விடுதலை சிறுத்தைகள் கட்சி போராட்டம்
  • காஞ்சிபுரத்தில் போராட்டம்; போலீஸ் குவிப்பு
அம்பேத்கர் சிலைக்கு   காவி துண்டு: விசிகவினர் சாலை மறியல்

காஞ்சிபுரம் ஒலிமுகம்மது பேட்டை பகுதியில் உள்ள  தமிழ்நாடு மின்சார வாரியத்தின் காஞ்சிபுரம் மின்பகிர்மான வட்டம் மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம் வாயில் முன்பு  அம்பேத்கர் சிலை உள்ளது. இந்த சிலைக்கு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் காவி துண்டு அணிவித்து விட்டு சென்றுள்ளனர். இந்த செய்தி அப்பகுதி முழுவதும் தீயாக பரவியது. ஏராளமான  விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மின்சார வாரிய அலுவலகம் முன்பு குவியத் தொடங்கினர். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

அவர்கள் அம்பேத்கர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்தர்களை அடையாளம் கண்டு உடனடியாக கைது செய்யக்கோரி வலியுறுத்தினர். உரிய விசாரணை நடத்தி அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். அம்பேத்கர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்த செய்தியால் அப்பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தொடர்ச்சியாக குவியத் தொடங்கினர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர், காஞ்சிபுரம் கோட்ட டி.எஸ்.பி ஜூலியர் சீசர் தலைமையில் ஏராளமான போலீசார்  குவிக்கப்பட்டனர். அப்போது, காவி உடை போர்த்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சமாதானம் செய்தனர்.

மேலும் படிக்க | புகாரளிக்க வந்த பொதுமக்களை தாக்கும் மின் ஊழியர்! அதிச்சியளிக்கும் வீடியோ!

ஆனால், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போலீசாருடன் தொடர்  வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. மேலும், மின்சார வாரிய அலுவலகம் முன்பு காஞ்சிபுரம் - வேலூர் சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. தொடர்ந்து விடுதலை சிறுத்தைக் கட்சியினர் அப்பகுதியிலேயே முகாமிட்டுள்ளனர். அதேபோல் ஏதேனும்  அசாம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுப்பதற்கும் ஏராளமான போலீசாரும் தொடர்ந்து அங்கு  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | தர்மபுரி மாணவி தீக்குளித்து தற்கொலை! வாக்குமூலத்தில் வெளியான சோகம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

More Stories

Trending News