தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உலகப் புகழ்பெற்ற சிவஸ்தலங்களுள் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ சங்கரநாராயண சுவாமி சமேத கோமதி அம்பாள் திருக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடித்தபசு பெருந்திருவிழா கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில் கோடி மக்கள் கொண்டாடும் இந்த ஆடித்தபசு திருவிழாவானது கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக ஆகம விதிகளின்படி திருக்கோவிலின் உட்பிரகார வீதிகளில் கொண்டாடப்பட்டது.
இந்த நிலையில் இந்த ஆண்டு கொரோனா தளர்வு உள்ள நிலையில் ஆடித்தபசு பெருந்திருவிழாவானது சிறப்பாக கொண்டாட வேண்டும் என திருக்கோவில் நிர்வாகம் முடிவு செய்த நிலையில் இன்று திருக்கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ கோமதி அம்பாள் சன்னதி முன்பு உள்ள கொடி மரத்திற்கு பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்து பின்னர் நெல் நாற்றுகளுடன் பச்சை பட்டு உடுத்தி தீபாரதனை செய்யப்பட்டு ஆடித்தபசு பெருந்திருவிழா கொடியேற்றம் போது விமரிசையாக நடைபெற்றது.
மேலும் படிக்க | ஆன்லைனில் ஆர்டர் செய்த சவர்மா கெட்டுப் போனதாக வாக்குவாதம் - வைரலாகும் வீடியோ
மேலும் விழாவில் முக்கிய நிகழ்வுகளான திருத்தேரோட்டம் வருகிற ஆகஸ்ட் 8ம் தேதி நடைபெறும் எனவும் சிகர நிகழ்ச்சியான தபசு காட்சி வருகிற 10ம் தேதி மாலை 5.30 மணிக்கு மேல் தபசு காட்சி நடைபெறும் எனவும் இரவு காட்சி 12:00 மணிக்கு நடைபெறும் எனவும் திருக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அத்துடன் வருகிற 10ம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் இன்று முதல் 12 நாட்கள் காலை, மாலை ஆகிய வேலைகளில் அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு பல்வேறு காட்சிகளில் எழுந்தருளி வீதி உலா நடைபெறும்.
தபசு திருவிழாவிற்காக பல்வேறு பகுதிகளுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு உள்ளன மேலும் பக்தர்கள் அச்சமின்றி சுவாமி தரிசனம் செய்து செல்லும் வகையில் சீருடை மற்றும் சீருடை அல்லாத காவல்துறையினர் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விழாவில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ராஜா, கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜி , நகராட்சி சேர்மன் உமாமகேஸ்வரி சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும் படிக்க | தமிழக இளைஞரை அதிரடியாக கைது செய்த மத்திய உளவுத்துறை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ