சிறையிலிருந்து வந்த பிறகு சிறிது காலம் ஓய்வில் இருந்த சசிகலா மீண்டும் அரசியல் பிரவேசம் செய்ய ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் தனது ஆதரவாளர்களைச் சந்திக்கும் அவர் ஆன்மீக சுற்றுப்பயணமும் செய்துவருகிறார். அதன்படி அதிமுக கட்சி கொடி கட்டிய காரில் நேற்றிரவு திருச்செந்தூர் சென்ற சசிகலா தனியார் விடுதி ஒன்றில் தங்கினார்.
அதன் பிறகு இன்று காலை திருச்செந்தூரில் சாமி தரிசனத்தை முடித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “ஒரு வேண்டுதல் காரணமாகவே வேல் காணிக்கை செலுத்தினேன். விரைவில் அரசியல் பயணத்தை மேற்கொண்டு மக்களை சந்திப்பேன்.அதிமுகவில்தான் இருக்கிறேன்.
தொண்டர்கள்தான் தலைவர் ஆகிறார்கள். இந்த ஓராண்டு கால ஆட்சியில் திமுக மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தமிழ்நாட்டில் பெண்களுக்கு இரவில் பாதுகாப்பு இல்லை. இரவு 9 மணிக்கு மேல் பெண்கள் தனியே செல்ல முடியவில்லை. இந்த ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. போலீஸ் நிலையங்களில் தி.மு.க.வினரால் கட்டப்பஞ்சாயத்து நடைபெற்று வருவதால் மக்கள் யாரும் நிம்மதியாக இருக்க முடியவில்லை. இதனால் தி.மு.க.வின் ஓராண்டு கால ஆட்சியில் மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டு உள்ளது.
மேலும் படிக்க | விக்னேஷ் லாக் அப் டெத் - இரண்டு காவல் துறையினர் கைது
தமிழகத்தில் அரசு அதிகாரிகளும் மக்களுக்கு எதிராக செயல்படுகிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள் முதல்-அமைச்சரின் கவனத்திற்கு செல்கிறதா இல்லையா என்று தெரியவில்லை.
இனி அரசு இதுபோல் நடைபெறாத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். ஜெயலலிதா ஆட்சியில் எந்த குறையும் இருந்தது கிடையாது. அதேபோன்று ஆட்சியை கொடுக்க விரும்புகிறேன்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR