முன்னால் முதல்வர் ஜெயலலிதா இறப்பிற்குப் பின் ஆ.தி.மு.க -வின் பொது செயலாளராக சசிகலா, ஆ.தி.மு.க அணியினரால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டது அனைவரும் அறிந்தது.
ஆனால் தற்போது அந்த தீர்மானத்தில் ஓர் திருப்பு முனையாக அந்த தீர்மானம் செல்லாது என தேர்தல் ஆணையம் திடுக்கிட வைத்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அஸ்பயர் சுவாமிநாதன் என்பவர் கேட்ட கேள்விக்கு தேர்தல் ஆணையம் கூறியுள்ளதாவது.
ஆ.தி.மு.க பொதுச் செயலாளர் யார் என்பது பற்றி இதுவரை முடிவெடுக்கவில்லை எனவும், அக்கட்சியினுள் உட்கட்சி பூசல் நிலவுவதால் இதுகுறித்து தீர்மானிக்கவில்லை என்று விளக்கமளித்தது.
இந்நிலையில் இதேபோன்ற கேள்வி ஒன்றிற்கு தேர்தல் ஆணையம் தற்போது கூறியுள்ளதாவது, ஆ.தி.மு.க பொதுசெயலாளராக சசிகலா நியமனம் செய்யபட்டதை இன்னும் அங்கீகரிக்க வில்லை என்று தெரிவித்துள்ளது.