கனமழை காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Last Updated : Oct 30, 2019, 08:58 AM IST
கனமழை காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, தமிழகத்தின் சில மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் வாரியாக பள்ளி, கல்லூரி விடுமுறை பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...

சென்னையில் வழக்கம் போல் பள்ளி, கல்லூரிகள் இன்று செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வெயில் நகரமாம் வேலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை. திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கும் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

More Stories

Trending News