தேவகோட்டை பள்ளியில் களப்பயணத்தை குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் கூறுவதாவது:-
எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் கல்லூரியின் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், ஆய்வுகளுக்க நேரடியாக அழைத்து செல்ல பட்டு அங்கு பேராசிரியர்களிடம் தொடர்ந்து கேள்விகள் கேட்டு பதில்கள் பெறும்போது அவர்களது கல்வி அறிவு மேம்படுகிறது. பள்ளியில் புத்தகத்தை மட்டுமே படிக்கும் மாணவர்களுக்கு இது புதிய அனுபவத்தை கொடுக்கும். மேலும் பொருளாதாரத்தில் ,சமுதாயத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள மாணவர்கள் இது போன்று கல்லூரிகளுக்கு அழைத்து வரும்போது அவர்கள் பிற்காலத்தில் மேல் படிப்பு படிக்க வேண்டும் என்கிற எண்ணத்தை ஒரு குறிக்கோளாக நங்கள் செய்கிற
காவல் நிலையம், பாரத ஸ்டேட் வங்கி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அஞ்சல் நிலையம், அகில இந்திய வானொலி நிலையம், தோட்டக்கலை துறை பண்ணை போன்ற இடங்களுக்கு கடந்த கல்வி ஆண்டில் களப்பயணமாக கல்வி ஆண்டில் அழைத்து சென்று பல்வேறு கேள்விகள் கேட்க செய்து மாணவர்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களை நேரடியாக கற்று கொடுத்துள்ளோம். காவல் நிலையத்தில் காவல் துறை அதிகாரி கருப்பசாமி, வங்கியில் முதன்மை மேலாளர் வேல்முருகன், உதவியாளர் முருகன், அறிவியல் கல்லூரியில் ( இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல்) துறை தலைவர்களும், பேராசிரியர்களும், கல்லூரி முதல்வர் சந்திரமோகன் அவர்களுடனும், அஞ்சல் நிலையத்தில் தபால் அதிகாரி செல்வராஜ் உடனும், அகில இந்திய வானொலி நிலையத்தில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பொன். தனபாலனுடனும், தோட்டக்கலை துறையில் தர்மருடனும் மாணவர்கள் தங்கள் கேள்விகளை களப்பயணத்தில் கேட்டு தெளிவு பெற்றுக்கொண்டனர்.
பாரத ஸ்டேட் வங்கிக்கு அழைத்து சென்று சுவைப் மெஷின் தொடர்பாகவும், ATM தொடர்பாகவும் கற்று தரும்போது அவர்கள் பெற்றோர்களுக்கும் அவர்களது வீட்டை சுற்றி உள்ளவர்களுக்கும் சொல்லி கொடுக்கும் வகையில் நேரடி அனுபவம் வாயிலாக கற்று கொள்கிறார்கள். தொடர்ந்து நான்கு வருடமாக அழைத்து செல்லும் எனக்கு, முதல் வருடம் வங்கிக்கு வந்திருந்த வாடிக்கையாளர் ஒருவர் சொன்னது நினைவுக்கு வருகிறது: "நான் கல்லூரியில் படிக்கும் காலத்திலும் ,வேலைக்கு சென்ற பிறகும் பல வருடங்கள் வங்கிக்கு சென்றது கிடையாது. பயம் தான் காரணம். வேலைக்கு வந்த பிறகு வேறு வழியில்லாமல் IOB வங்கிக்கு பயந்து கொண்டே சென்றேன். ஏன் பயம்? எனக்கு வங்கி படிவம் எப்படி பூர்த்தி செய்ய வேண்டும் என்பது தெரியாது. அப்புறம் தட்டு தடுமாறி வங்கி அலுவலர் உதவியுடன் பூர்த்தி செய்தேன். நீங்கள் 8 ம் வகுப்பு படிக்கும்போதே மாணர்வகளை பாரத ஸ்டேட் வங்கிக்கு அழைத்து வந்து அனைத்து விஷயங்களையும் சொல்லி கொடுப்பது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது என கூறினார். அது எனக்கு மிகப்பெரிய ஊக்கப்படுத்தும் வார்த்தையாக இருந்தது". தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக அழைத்து செல்கிறேன். அதுவே மிகப்பெரிய கல்வி அனுபவம் ஆகும். வங்கியிலும் முழு ஒத்துழைப்பு அழைத்து உதவி செய்கிறார்கள்.
இந்த ஆண்டு முதன் முறையாக தமிழக அரசின் தோட்டக்கலை துறை பண்ணைக்கு அழைத்து சென்றோம். அங்கு தோட்டக்கலை துறை அலுவலர் தருமர் எங்களுக்கு பதியம் போடுதல், குழித்தட்டு நாற்றங்கால் இடுவது, ஒட்டு செய்வது, கவாத்து செய்வது என அனைத்துமே ஆசிரியைகள், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவருக்கும் புதிய தகவலாக, விவசாயம் தொடர்பாக இளம் வயது மாணவர்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இருந்தது. தேவகோட்டை நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி அவர்கள் சில நாள் கழித்து என்னிடம் பேசும்போது முன்பே தெரிந்து இருந்தால் தானும் வந்து கற்று கொண்டு இருப்பதாக சொன்னார். என்னிடம் பல பேர் இதனை சொன்னார்கள். அமெரிக்காவில் இருந்து என்னிடம் பேசிய பிரித்வி என்கிற தமிழ்நாட்டு பெண், எனக்கு மரம் என்றாலே என்னவென்று தெரியாமல் போய்விட்டது. நீங்கள் இளம் வயது மாணவர்களுக்கு அருமையான விஷயத்தை சொல்லி கொடுத்து வருகிறீர்கள் என்று சொன்னர்கள்.
இவ்வாறு தேவகோட்டை பள்ளியில் தலைமை ஆசிரியர் கூறினார்.