விஜயலட்சுமி புகார்: கைதுக்கு வாய்ப்பு இருந்ததால் நேரில் ஆஜராகாத சீமான்

திருமணம் செய்துகொள்வதாக கூறி தன்னை ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரில் காவல்துறை விசாரணைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 2வது முறையாக நேரில் ஆஜராகவில்லை.  

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 12, 2023, 01:37 PM IST
  • நடிகை விஜயலட்சுமி அளித்த புகார்
  • சீமான் மீது மேலும் ஒரு வழக்கு
  • விசாரணைக்கு ஆஜராகவில்லை
விஜயலட்சுமி புகார்: கைதுக்கு வாய்ப்பு இருந்ததால் நேரில் ஆஜராகாத சீமான் title=

நடிகை விஜயலட்சுமி புகார்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி 2011 ஆம் ஆண்டு திருமண மோசடி புகார் ஒன்றை அளித்தார். பின்னர் அந்த வழக்கை வாபஸ் பெற்ற அவர், தொடர்ச்சியாக சீமான் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார். சமூகவலைதளங்களில் வீடியோக்கள் மூலம் குற்றச்சாட்டுகளை சுமத்தி வந்த அவர், இப்போது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேரடியாக புகார் அளித்திருக்கிறார். அதில், கருக்கலைப்பு மற்றும் பண மோசடிகள் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை கூறினார்.

காவல்துறை 8 மணி நேர விசாரணை 

இந்த புகாரின் அடிப்படையில் நடிகை விஜயலட்சுமியிடம் சென்னை போலீசார் முதலில் விசாரணை நடத்தினர். சுமார் 8 மணிநேரம் விசாரணை நடத்திய காவல்துறை, அவரது வாக்குமூலத்தை திருவள்ளூர் நீதிமன்றத்தில் பதிவு செய்தது. இதன் பின்னர் கட்டாய கருக்கலைப்பு புகார் தொடர்பாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

மேலும் படிக்க | உதயநிதி தலைக்கு விலை... அவர் போலி சாமியாராக தான் இருக்க வேண்டும் - அண்ணாமலை அதிரடி!

சீமானுக்கு சம்மன்

இதனையடுத்து விஜயலட்சுமியின் புகாரின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு நேரில் ஆஜராகக்கோரி சம்மன் அனுப்பப்பட்டது. செப்டம்பர் 9 ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு கூறப்பட்டிருந்த நிலையில், கட்சிப் பணிகளை காரணம் காட்டி செப்டம்பர் 12 ஆம் தேதி நேரில் ஆஜராவதாக வளசரவாக்கம் காவல்துறையினருக்கு தெரிவித்திருந்தார். அதன்படி இன்று சீமான் காவல்துறை விசாரணைக்கு நேரில் ஆஜரவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் விசாரணைக்கு இரண்டாவது முறையாக நேரில் ஆஜராகவில்லை. அவருக்கு பதிலாக காவல்துறையினர் நேரில் ஆஜராகி விளக்கம் கொடுத்தனர். 

சீமான் மீது மேலும் ஒரு வழக்கு

ஏற்கனவே நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. அதில் இன்று இன்னொரு வழக்கும் பதியப்பட்டுள்ளது. அதாவது, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டப்
பிரிவுகளும் சீமான் மீது இப்போது பாய்ந்திருக்கிறது. ஒருவேளை சீமான் விசாரணைக்கு ஆஜரானால் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அவர் ஆஜராகாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | மகளிர் உரிமைத் தொகை:முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவிப்பின் முக்கிய அம்சங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News