திமுக VS பாஜக - ட்விட்டரில் ட்ரெண்டான 'செருப்பு பிஞ்சிரும் அண்ணாமல'

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் செருப்பு வீசியதை அடுத்து ட்விட்டரில் செருப்பு பிஞ்சிரும் அண்ணாமல என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகியுள்ளது.

Written by - க. விக்ரம் | Last Updated : Aug 13, 2022, 07:26 PM IST
  • அமைச்சர் கார் மீது இன்று செருப்பு வீசப்பட்டது
  • இதுதொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
  • அமைச்சர் மீதும் புகார் அளிக்கப்பட்டுள்ளது
 திமுக VS பாஜக - ட்விட்டரில் ட்ரெண்டான 'செருப்பு பிஞ்சிரும் அண்ணாமல' title=

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமணன் (வயது 22) என்ற ராணுவ வீரர் காஷ்மீரில் நேற்று முன் தினம் பயங்கரவாதிகளுடன் நடந்த மோதலில் வீரமரணம் அடைந்தார். இதனையடுத்து அவரது உடல் இன்று மதுரை கொண்டு வரப்பட்டது. லட்சுமணனின் உடலுக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

அஞ்சலி செலுத்திவிட்டு வந்தபோது அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் திடீரென காலணிகளை வீசி பாரத் மாதா கி ஜே என கோஷமிட்டனர். அமைச்சர் கார் மீது காலணி வீசப்பட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Palanivel Thiagarajan

இதனையடுத்து காவல் துறையினர், அமைச்சர் கார் மீது செருப்பு வீசிய விவகாரத்தில் ஐந்து பேரை கைது செய்தனர். மேலும் திமுகவினரும் மதுரையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

Trending

இந்நிலையில், சமூக வலைதளங்களிலும் திமுகவினர் தங்களது எதிர்ப்பை காட்ட ஆரம்பித்திருக்கின்றனர். அந்தவகையில், செருப்புபிஞ்சிரும்அண்ணாமல என்ற ஹேஷ் டேக்கை ட்விட்டரில் ட்ரெண்டாக்கிவருகின்றனர். மேலும் அந்த ஹேஷ்டேக்கின் கீழ் அண்ணாமலைக்கு எதிராகவும், பாஜகவுக்கு எதிராகவும் கருத்து கூறிவருகின்றனர்.

 

இதற்கிடையே, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தரக்குறைவாக பேசினார். இதை கண்டித்து அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பி சென்ற அமைச்சரின் காரை நிறுத்தி பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அப்போது அமைச்சரின் கார் ஓட்டுநர், பாஜகவினர் மீது காரை ஏற்றுவது போல் சென்றுள்ளார்.

மேலும் படிக்க | அண்ணாமலையை தரக்குறைவாக பேசினார் பிடிஆர் - செருப்பு வீச்சு விவகாரத்தில் நடந்தது என்ன?

அமைச்சரின் பாதுகாப்புக்காக வந்திருந்த போலீஸாரும் பாஜகவினர் மீது தடியடி நடத்தியுள்ளனர். எனவே அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜகவினர் காவல் துறையில் புகாரும் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News