ஆபாச படத்தை காட்டி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக பிரமுகர் கைது

6 சிறுமிகளிடம் ஆபாச படங்களை காண்பித்து பாலியல் தொல்லை கொடுத்த பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 12, 2021, 09:55 AM IST
ஆபாச படத்தை காட்டி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக பிரமுகர் கைது title=

தமிழ்நாடு: மயிலாடுதுறை அருகே சிறுமிகளுக்கு ஆபாச படத்தை காட்டி பாலியல் தொல்லை கொடுத்த பாஜக மேற்கு ஒன்றிய பொதுச் செயலாளர் மகாலிங்கம் என்பவரை போக்சோ சட்டத்தில் போலீஸ் கைது செய்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட கோழிகுத்தி கிராமத்தை சேர்ந்தவர் மகாலிங்கம். இவர் பாஜக (BJP) ஒன்றிய நிர்வாகி ஆவார்.

ALSO READ | 14 ஆண்டுகளாக பாலியல் தொல்லை - மூன்று குழந்தைகளுக்கு தாயான பெண்

ஒரு கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 மற்றும் 7 வயது சிறுமிகள் உட்பட 6 சிறுமிகளிடம் தனது செல்போனில் உள்ள ஆபாச படங்களை (Sexual Harassment) காண்பித்து அதுபோல் தன்னிடம் செய்ய வேண்டும் என்று மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து துணிச்சலாக ஒரு சிறுமியின் பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இந்நிலையில் சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் மகாலிங்கத்தை போலீசார் கைது செய்தனர். குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல் விடுத்தல், சிறுமிகளின் பாலியல் இச்சையை தூண்டுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் மகாலிங்கத்தின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் வசிக்கும் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கு குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ASLO READ |  நாமக்கல்லில் நடுங்க வைக்கும் சம்பவம்: சிறுமி பாலியல் வன்கொடுமை, 12 பேர் கைது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News