3மாத பேரக்குழந்தையின் பிறப்புறுப்பை அறுத்து கொன்றுவிட்டு தப்பி ஓடிய பாட்டி

கோவையில் 3 மாத பேரக்குழந்தையின் பிறப்புறுப்பை அறுத்து கொன்றுவிட்டு தப்பி ஓடிய பாட்டியை தேடி வரும் காவல் துறையினர். 

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 22, 2021, 01:11 PM IST
  • 3 மாதங்களுக்கு முன்பு இரட்டை குழந்தை பிறந்தது.
  • ஆண் குழந்தைக்கு ஆரியன் என்று பெயர் வைத்தனர்.
  • பெண் குழந்தைக்கு ஆரிகா ஸ்ரீ என்று பெயர் வைத்தனர்.
3மாத பேரக்குழந்தையின் பிறப்புறுப்பை அறுத்து கொன்றுவிட்டு தப்பி ஓடிய பாட்டி

கோயம்புத்தூர்: கோவை கவுண்டம்பாளையம் பயங்கர கொடூரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட அனைவரும் திகைத்து போயியுள்ளனர். ஒரு பச்சிளம் குழந்தையை எப்படி எல்லாம் கொலை செய்ய எப்படி மனசு வருகிறது என அனைவரின் கேள்வியாக உள்ளது. இந்த கொடூர சம்பவத்தை செய்தது வேறு யாரோ அல்ல. அந்த குழந்தையின் பாட்டி தான். இப்படி ஒரு சம்பவத்தை செய்துவிட்டு தலைமறைவான அவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். என்ன நடந்தது என்பதைப் பற்றி தெரிந்துக்கொள்ளுவோம்.

பாஸ்கரன்  மற்றும் ஐஸ்வர்யா தம்பதியினர். இருவருக்கும் 3 மாதங்களுக்கு முன்பு இரட்டை குழந்தை பிறந்தது. ஒன்று ஆண் குழந்தை, மற்றொன்று பெண் குழந்தை. ஒரே பிரசவத்தில் பிறந்த ஆண் மற்றும் பெண் குழந்தைகள் பிறந்ததால் மகிழ்ச்சி அடைந்த குடும்பம் ஆண் குழந்தைக்கு ஆரியன் என்றும் பெண் குழந்தைக்கு ஆரிகா ஸ்ரீ என்றும் பெயர் வைத்தனர். இரண்டை குழந்தைகள் பிறந்துள்ளதால், அவர்களை கவனித்துக்கொள்ள ஐஸ்வர்யாவின் தாயார் சாந்தி (குழந்தையின் பாட்டி) சேரன் நகர் நாகப்பா காலனி பகுதியில் வசிக்கும் அவர்களுடன் தங்கி, கடந்த 2 மாதமாக குழந்தைகளை கவனித்து வந்துள்ளார்.

நேற்று இரவு குழந்தைகளின் தாய் ஐஸ்வரியா மருந்து வாங்குவதற்காக கடைக்குச் சென்று விட்டு திரும்பி வீட்டுக்கு வந்தபோது, பாட்டி சாந்தி குழந்தையை யாரோ வந்து தூக்கிச் சென்றுவிட்டதாகக் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த தாய் ஐஸ்வரியா குழந்தைகளை தேடியுள்ளார். அப்பொழுது ஆண் குழந்தை ஆரியன் படுக்கையில் பிறப்புறுப்பில் காயங்களுடனும், பெண் குழந்தை ஆரிகா ஸ்ரீ கழிப்பறைக்குள் அழுக்கு துணியால் வைத்து மூடப்பட்ட நிலையில் இருந்ததை பார்த்து மிகுந்த அதிர்ச்சி அடைந்த ஐஸ்வர்யா என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து போயிள்ளார். இதற்கிடையில் பாட்டி சாந்தி அங்கிருந்து தப்பி ஓட்டியுள்ளார். 

ALSO READ |  கொலை வழக்கில் திமுக MP ரமேஷ் பண்ருட்டி நீதிமன்றத்தில் சரண்; 2 நாள் நீதிமன்றக் காவல்

இந்த சம்பவம் குறித்து அவரது கணவர் பஸ்கரனுக்கு தகவல் தெரிவித்த ஐஸ்வர்யா, அடுத்து உடனடியாக துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.  

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த துடியலூர் போலீசார் காயமடைந்த பெண் குழந்தையை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த ஆண் குழந்தையை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதையடுத்து பேரக்குழந்தையை கொன்றுவிட்டு பேத்தியை கொடூரமாக தாக்கி கொலை செய்ய முயற்சி செய்து விட்டு தப்பி ஓடிய பாட்டி சாந்தியை போலீசார் தேடி வருகின்றனர். 

மேலும் பாட்டி சந்தியைக் குறித்து விசாரித்த போது, அவர் 15 ஆண்டுகளாக மனரீதியான பாதிப்புடன் இருந்து வருகிறார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் தப்பி ஓடிய பாட்டி சாந்தியை போலிசார் தேடிவருகின்றனர்.

ALSO READ |  திண்டுக்கலில் தலை துண்டித்து வாலிபர் கொடூரக் கொலை; 6 பேர் கைது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News