அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி திருவுருவச் சிலையினை காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி திறந்து வைத்தார்!
திமுக கட்சி தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையின் திறப்பு விழா இன்று முக்கிய தலைவர்கள் பங்கேற்க நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அனைத்து தலைவர்களுக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்ட நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுக்கொண்டனர்.
Chennai: UPA chairperson Sonia Gandhi unveils former Tamil Nadu Chief Minister M Karunanidhi's statue, at DMK headquarters pic.twitter.com/hM34stQqof
— ANI (@ANI) December 16, 2018
பாஜக எம்.பி. சத்ருகன் சின்ஹா, முத்தரசன், திருமாவளவன், ஜி,கே.வாசன், கவிஞர் வைரமுத்து, நடிகர்கள் ரஜினிகாந்த், நாசர், பிரபு, வடிவேலு, விவேக், மயில்சாமி, பிரபு, குஷ்பு உள்ளிட்டோரும் விழாவில் பங்கேற்றனர்.
திமுக தலைவர் முக ஸ்டாலின் முன்னிலையில் கருணாநிதி சிலையினை திறந்து வைத்த சோனியா காந்தி, சிலையை திறந்துவைத்த பின்னர் மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த சென்றனர். அவர்களுடன் தலைவர்களும் சென்றனர்.
இந்நிகழ்வினை தொடர்ந்து சென்னை YMCA விளையாட்டுத் திடலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு கூட்டத்தில் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.