விரைவில், செல்போன் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட்

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் செல்போன்கள் மூலம் டிக்கெட் எடுக்க வருகிற ஜனவரியில் புதிய ‘ஆப்’ வெளியிடுகிறது. 

Last Updated : Dec 28, 2019, 03:18 PM IST
விரைவில், செல்போன் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் title=

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் செல்போன்கள் மூலம் டிக்கெட் எடுக்க வருகிற ஜனவரியில் புதிய ‘ஆப்’ வெளியிடுகிறது. 

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பயணிகளுக்கு பல்வேறு சிறப்பு சலுகைகளை செய்து வருகிறது. இதனால் மெட்ரோ ரயிலில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.

அந்தவகையில் தற்போது சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பயணிகளின் வசதிக்காக செல்போன் மூலம் டிக்கெட் எடுக்கும் புதிய முறையை விரைவில் அமல்படுத்த உள்ளது. இதன் மூலம் பயணிகள் நீண்ட வரிசையில் நின்று டிக்கெட் எடுக்க வேண்டியதில்லை. 

இந்த புதிய செயலி வருகிற ஜனவரியில் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிடுகிறது. அதை செல்போனில் (ஸ்மார்ட் போனில்) பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதன் மூலம் ஸ்மார்ட் கார்டில் பணத்தை ‘ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். 

இது தவிர ‘கியூஆர்-கோடு முறையும் அமல்படுத்தப்பட உள்ளது. இ-டிக்கெட்டை அடிப்படையாக கொண்டது. இன்னும் 6 மாதத்தில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இவற்றின் மூலம் ‘கியூ’ வரிசையில் நின்று பயணிகள் டிக்கெட் பெறுவது தவிர்க்கப்படும்.

இந்த முறை மும்பையில் 10 மெட்ரோ ரயில் நிலையங்களிலும், டெல்லி மெட்ரோ மற்றும் விமான நிலையத்திலும் நடைமுறையில் உள்ளது. 

Trending News