முதல் அரையாண்டில் சாதனை படைத்த தெற்கு ரயில்வே..!

2018 - 2019 முதல் அரையாண்டில் தெற்கு ரயில்வேக்கு 4434 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது..! 

Last Updated : Oct 13, 2018, 02:39 PM IST
முதல் அரையாண்டில் சாதனை படைத்த தெற்கு ரயில்வே..!  title=

2018 - 2019 முதல் அரையாண்டில் தெற்கு ரயில்வேக்கு 4434 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது..! 

2018 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையான 6 மாதக்கால சாதனைகள் பற்றித் தெற்கு இரயில்வே பொதுமேலாளர் குல்ஷ்ரேஸ்தா சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது 2018 - 2019 நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் தெற்கு ரயில்வே நாலாயிரத்து 434 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாகவும் இது கடந்த ஆண்டில் இதே காலக்கட்டத்தை விட 15 விழுக்காடு அதிகம் என்றும் தெரிவித்தார். 

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்குப் பசுமை நிலையம் என்கிற விருதை இந்தியத் தொழில் கூட்டமைப்பு வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். ரயில் சேவையைத் தெரிந்து கொள்வதற்கான Rail partner என்னும் செயலியையும் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் குல்ஷ்ரேஸ்தா தொடக்கி வைத்தார்.

 

Trending News