அணில் கதையும், தெர்மாகோல் ப்ளேஷ்பேக்கும்.!

பழைய சம்பவங்களை குறிப்பிட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் இருவர் மாறிமாறி கிண்டலடித்துக் கொண்டனர்.   

Written by - நவீன் டேரியஸ் | Last Updated : Apr 9, 2022, 01:06 PM IST
  • செந்தில்பாலாஜி சொன்ன அணில் விளக்க கதை.!
  • செல்லூர்ராஜூ செய்த தெர்மாகோல் விஞ்ஞான முயற்சி
  • மாறிமாறி கலாய்த்துக் கொண்ட சட்டமன்ற உறுப்பினர்கள்
அணில் கதையும், தெர்மாகோல் ப்ளேஷ்பேக்கும்.!  title=

சம்பவம் - 1

உலக வெப்பமயமாதல் காரணமாக நீர்நிலைகளில் தண்ணீர் விரைவாக ஆவியாகிறது. இதனை தடுக்கும் விதமாக 2015ஆம் ஆண்டில் லாஸ் ஏஞ்சல்ஸ் குளத்தில் 96 மில்லியன் மிதக்கும் பிளாஸ்டிக் பந்துகளை அமெரிக்க விஞ்ஞானிகள் குளத்தில் மிதக்கவிட்டு அதன்மூலம் குளத்தில் உள்ள நீர் ஆவியாதலை தடுத்தனர். இது ஒரு வெற்றிகரமான முயற்சியாக கருதப்பட்டது. கடந்த அதிமுக ஆட்சியின் போது அப்போதைய அமைச்சர் செல்லூர் ராஜூ இதை தமிழ்நாட்டில் முயன்று பார்த்தார். கடைகளில் இருந்து தெர்மாகோல் அட்டைகளை ‘செல்லோ டேப்பால்’ ஒட்டி அரசு அதிகாரிகளுடன் மதுரை வைகை அணைக்கு வந்தார். தண்ணீர் ஆவியாதலை தடுக்கும் வகையில் தெர்மாகோல் அட்டைகளை நீரில் மிதக்க விட்டார். அடுத்த சில நிமிடங்களில் அந்த அட்டைகள் காற்றில் பறந்து அங்குமிங்கும் திரிந்து குப்பைகளாகின. இந்தச் சம்பவம் கேலியாக்கப்பட்டு, கடும் விமர்சனத்தையும் பெற்றது. இந்தச் சம்பவத்தின் மூலம் தெர்மாகோல் விஞ்ஞானி என்று அழைக்கப்பட்ட செல்லூர் ராஜூ, மீம்ஸ் கிரியேட்டர்களிடமும் வசமாக சிக்கினார். அரசியல் ரீதியாக செல்லூர் ராஜூவின் இந்த நடவடிக்கையை பலரும் அப்போது கடுமையாக விமர்சித்தனர். 

மேலும் படிக்க | புஷ்பா பாடலை பாடி மன்னிப்பு கேட்ட கரூர் ஆட்சியர்- வைரலாகும் வீடியோ

சம்பவம் - 2 

10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சிக்கு வந்த புதிது. ஒரு சிலப் பகுதிகளில் அடிக்கடி மின்சாரத் தடை ஏற்பட்டிருந்தது. இதனால் எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வந்த நிலையில், மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியோ வித்தியாசமான ஒரு விளக்கத்தை அளித்தார். கேபிள்களை அணில்கள் கடித்து சேதப்படுத்துவதாகவும், இதனால்தான் மின்சாரத் தடை ஏற்படுவதாகவும் கூறினார். இந்த விளக்கம் அப்போதே கேலிக்குள்ளாக்கப்பட்டு விமர்சனத்துக்குள்ளாகின. 

சம்பவம் - 3 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்தந்த துறை சார்ந்த கேள்விகளும், அதற்கான விளக்கங்களும் நடைபெற்று வரும் நிலையில், கூட்டுறவுத்துறை  மானியம் மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜு, ‘மதுரையில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. அதனால் மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர், அணில் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று பேசினார். அமைச்சர் செந்தில் பாலாஜியை கிண்டல் செய்யும் விதமாக அவர் குறிப்பிட்டுப் பேசினார். இதற்கு, அதிமுக உறுப்பினர்கள் இடையே சிரிப்பலை எழுந்தது. அந்த நேரத்தில் மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சரான செந்தில் பாலாஜி எதுவும் பதிலளித்துப் பேசவில்லை. 

மேலும் படிக்க | பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு...மன்னிப்புக் கேட்ட எஸ்.வி.சேகர்

சம்பவம் - 4 

நேற்று நடந்த சட்டப்பேரவை நிகழ்வுக்கு, அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று டிவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். அணில் சம்பவத்தை கலாய்த்த செல்லூர் ராஜூவுக்கு, தெர்மாகோல் சம்பவத்தை வைத்து அமைச்சர் செந்தில்பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள செந்தில் பாலாஜி, ‘தமிழ்நாட்டில் மின் தடை இல்லை என தெரிந்து 'தடை வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்' என்கிறார் தெர்மோகோல் விஞ்ஞானி. எங்கள் பணியை நாங்கள் சிறப்பாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். சித்திரை வெயிலில் வைகை நீர் ஆவியாகி விடாமல் தடுக்க உடனடியாக தெர்மோகோல் எடுத்துக் கொண்டு கிளம்புங்கள்.’ என்று பதிவிட்டுள்ளார். 

 

மேலும் படிக்க | பாலியல் வழக்கில் கைதான பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன்!

 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

 

Trending News