பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு...மன்னிப்புக் கேட்ட எஸ்.வி.சேகர்

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் இழிவாக பதிவிட்டதாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்ததை, நான்கு வழக்குகளிலும் தனித்தனி பிரமாணப் பத்திரமாகத் தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Written by - Chithira Rekha | Last Updated : Apr 8, 2022, 02:09 PM IST
  • பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு
  • மன்னிப்பு கோரினார் எஸ்.வி.சேகர்
  • பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய உத்தரவு
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு...மன்னிப்புக் கேட்ட எஸ்.வி.சேகர் title=

தமிழக ஆளுனராக பன்வாரிலால் புரோஹித் இருந்தபோது பெண் பத்திரிகையாளர் ஒருவர் அவமதிக்கப்பட்டது தொடர்பாக ஆளுநர் வருத்தம் தெரிவித்திருந்தார். அப்போது பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக  சமூக வலைதளங்களில் ஒருவர் வெளியிட்ட பதிவை பாஜக-வை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சென்னை மத்தியக் குற்றப்பிரிவு காவல் துறையினர், எஸ்.வி. சேகர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். 

மேலும் படிக்க | எஸ்.வி. சேகரை உடனடியாக கைது செய்க: மார்க்சிஸ்ட் அறிக்கை!

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, சமூக வலைதளத்தில் பதிவு செய்ததை நீக்கி மன்னிப்பு கேட்டு விட்டதாக எஸ்.வி.சேகர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், நீதிமன்றத்திலும் மற்றொரு முறை மன்னிப்பு கேட்கத் தயாராக இருப்பதாவும் எஸ்.வி.சேகர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

SV Sekar

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கு தொடர்பாக ஒரு முறைமுறை கூட எஸ்.வி.சேகர் விசாரணைக்காக ஆஜராகவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அமெரிக்காவில் உள்ள நபர் ஒருவரின் கருத்தை படித்து பார்க்காமல் பகிர்ந்து விட்டதாகவும், தனது தவறுக்கு மன்னிப்பு கேட்பதில் வெட்கப்படவில்லை எனக் கூறி, நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாகவும் எஸ்.வி.சேகர் தரப்பில் மனுத்தாக்கல் செய்யபட்டது. மேலும், விசாரணைக்கு தேவைப்படும்போதெல்லாம் ஆஜராவதாகவும் எஸ்.வி.சேகர் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவது குறித்த நடிகர் எஸ்.வி.சேகரின் நிலைப்பாட்டை, நான்கு புகார்கள் மீதான வழக்குகளிலும் தனித்தனி பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 18-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

மேலும் படிக்க | தேசியக் கொடியை அவமரியாதை செய்த BJP-ஐ சேர்ந்த எஸ்.வி.சேகர் மீது வழக்குப் பதிவு

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News