வீரமணியின் பேச்சை RSS போன்ற அமைப்பினர் தவறாக சித்தரித்து விட்டார்கள்: ஸ்டாலின்

கி.வீரமணி கிருஷ்ணரை பற்றி சர்ச்சையாக பேசியிருந்தால் அது தவறு; அவர் உள்நோக்கத்தோடு எதுவும் பேசவில்லை என ஸ்டாலின் தெரிவிவ்த்துள்ளது!!

Last Updated : Apr 6, 2019, 11:19 AM IST
வீரமணியின் பேச்சை RSS போன்ற அமைப்பினர் தவறாக சித்தரித்து விட்டார்கள்: ஸ்டாலின் title=

கி.வீரமணி கிருஷ்ணரை பற்றி சர்ச்சையாக பேசியிருந்தால் அது தவறு; அவர் உள்நோக்கத்தோடு எதுவும் பேசவில்லை என ஸ்டாலின் தெரிவிவ்த்துள்ளது!!

கி.வீரமணியின் பேச்சை RSS போன்ற அமைப்பினர் தவறாக சித்தரித்து விட்டார்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ANI செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் ANI நிறுவனத்திடம் கூறுகையில், கடந்த மாதம் 20 ஆம் தேதி என்னுடைய செயற்குழு தேர்தல் பிரட்சாரத்தை துவங்கியுள்ளேன். தொடர்ந்து ஏறக்குறைய 30 நாடாளுமன்ற தொகுதிகளில் பிரச்சாரத்தை முடித்துள்ளேன். அந்த 30 தொகுதிகளிலும் நான் மக்களுடத்தில் தெரிந்து கொண்ட உணர்வு, மத்தியில் மோடி தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆட்சி மற்றும் தமிழகத்தில் நடைபெரும் எடப்பாடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்ற ஒரே முடிவுடன் மக்கள் இருக்கின்றனர் என்பது தெளிவாக தெரிகிறது. 

கிருஷ்ணரை பற்றி சர்ச்சையாக பேசியது குறித்த கேள்விக்கு ஸ்டாலின் பதிலளிக்கையில், அதாவது கி.வீரமணி பேசியது தேர்தல் பிரட்சாரத்தில் பேசிய பேச்சு இல்லை. கொச்சைப்படுத்தி பேசவேண்டும் என்ற நோக்கத்தில் அவர் பேசவில்லை. அவர் சில உதாரணங்களை கூறி பேசியுள்ளார். அதை, இன்றைக்கு சில ஊடகங்கள், RSS போன்ற கட்சிகள் தேர்தல் நேரத்தில் தவறாக சித்தரித்து மக்களிடத்தில் இதை தவறாக கொண்டுபோய் சேர்க்கவேண்டும் என்ற நோக்கத்தில் திட்டமிட்டு செய்த சதி. அது உண்மையானது இல்லை, அப்படி உண்மையாக இருந்திருந்தால் அது தவறு என்றுதான் நான் ஏற்கனவே கூறியிருந்தேன். 

திமுகவை பொறுத்தவரை தெளிவாக கூறவேண்டும் என்று சொன்னால், பேரறிஞர் அண்ணாவின் கொள்ளகை என்பது "ஒன்றே குளம் ஒருவனே தேவன்" என்பது தான் அவர் கொள்கை. அதே போல் கலைஞர் அவர்களும், "கோவிகள் கூடாதென்பது திமுகவின் கொள்ளை அல்ல, கோவிகள் கொடியவர்கள் கூடாரமாக மாறிவிடக்கூடாது" என குறிப்பிட்டுள்ளார். இந்துக்களை பொறுத்தவரை 90 சதவிகிதம் திமுகவில் இந்துக்கள் தான் தொண்டட்டி வருகின்றனர் என அவர் தெரிவித்தார். 

 

Trending News