போலீஸ் வேலைக்காக தேர்வான 1000 பேர் பணி நியமனம் நிறுத்திவைப்பு

போலீஸ் தேர்வில் ஏற்பட்ட மோசடி தொடர்பாக ஆயிரம் பேருக்கு பணி ஆணை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Last Updated : Feb 9, 2020, 02:19 PM IST
போலீஸ் வேலைக்காக தேர்வான 1000 பேர் பணி நியமனம் நிறுத்திவைப்பு title=

போலீஸ் தேர்வில் ஏற்பட்ட மோசடி தொடர்பாக ஆயிரம் பேருக்கு பணி ஆணை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் டி.என்.பி.எஸ்.சி. பணியாளர் தேர்வில் பெரிய அளவில் மோசடி நடந்த நிலையில் தற்போது கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் நடந்த போலீஸ் பணியாளர் தேர்வில் போலி சான்றிதழ் கொடுத்து பலர் வேலையில் சேர முயன்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தமிழக போலீஸ் துறை, தீயணைப்பு துறை, ஜெயில் துறை ஆகியவற்றுக்கான காவலர்களை தேர்வு செய்ய தனியாக சீருடை பணியாளர் தேர்வாணையம் செயல்பட்டு வருகிறது. இதற்கான ஆட்களை தேர்வு செய்வதற்கு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 25-ஆம் தேதி எழுத்து தேர்வு நடந்தது. இந்த தேர்வில் 3 லட்சத்து 25 ஆயிரம் பேர் எழுதினார்கள். அதில் வெற்றி பெற்றவர்களுக்கு 15 மையங்களில் உடல் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. இதில், 47 ஆயிரம் பேர் வெற்றி பெற்றார்கள். 

விளையாட்டு இடஒதுக்கீட்டில் தேர்வு பெற்று இருந்த அனைவருடைய விளையாட்டு சான்றிதழ்களும் சரிபார்ப்பு பணிக்காக தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்கள் 1000 சான்றிதழ்களுக்கு மேல் தகுதியற்றது என்று கூறி உள்ளனர்.

ஆனால், தமிழக விளையாட்டு ஆணையம் அங்கீகரித்த போட்டிகளில் அல்லாமல் வேறு அமைப்புகள் நடத்திய போட்டிகளில் பங்கேற்றவர்களும், சங்கம் மற்றும் அமைப்புகளிடம் இருந்து சான்றிதழ் பெற்று விண்ணப்பித்து இருக்கிறார்கள். அது மட்டும் அல்லாமல் ஏராளமானோர் போலியாகவும் சங்கம் மற்றும் அமைப்புகளிடம் இருந்து சான்றிதழ் பெற்றதும் தெரிய வந்துள்ளது.

இது சம்பந்தமாக போலீஸ் தலைமையக சிறப்பு குழு ஒன்று சான்றிதழ்களை தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் தவறான சான்றிதழ்களை கொடுத்து இருந்தாலோ, போலி சான்றிதழ் வழங்கி இருந்தாலோ அது மோசடி குற்றமாக கருதப்பட்டு அவர்கள் மீது கிரிமினல் சட்டப்படி விசாரணை நடத்தப்படும் என்றும் அதிகாரிகள் கூறினார்கள்.

Trending News