திமுக பொருளாளரும் மக்களவை உறுப்பினருமான டி.ஆர் பாலு தொடர்ந்த அவதூறு வழக்கீல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரில் ஆஜராக வேண்டும் என சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சொத்து பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை..
பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் 14 ம்தேதி பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார். அப்போது, திமுக பைல்ஸ் என்ற பெயரில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களின் சொத்துப்பட்டியலை வெளியிட்டார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையினை கிளப்பியது. இதில் தி.மு.க பொருளாளரான டி.ஆர் பாலுவின் சொத்துப்படியலையும் அவர் வெளியிட்டிருந்தார்.
டி.ஆர்.பாலு அவதூறு வழக்கு:
சொத்துப்பட்டியலை அண்ணாமலை வெளியிட்டதை தொடர்ந்து, திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு அவர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதுகுறித்து அவர் தாக்கல் செய்த மனு வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில், அந்த மனுவில், 60 ஆண்டுகளுக்கும் மேலாக பொது வாழ்க்கையில் ஈடுபட்டு வரும் தனக்கு எதிராக எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் அவதூறு கருத்துக்களை அண்ணாமலை தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 10 ஆயிரத்து 841 கோடி ரூபாய் மதிப்பிலான 21 நிறுவனங்கள் தனக்கு சொந்தமானவை என அண்ணாமலை கூறியது தவறானது என்றும் அவதூறானது என்றும் மனுவில் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | செந்தில் பாலாஜி கைது: கோவையில் கண்டனப் பொதுக்கூட்டம்
எந்தவித அடிப்படை ஆதாரம் இல்லாமல் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டுள்ள அண்ணாமலையை அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.
அண்ணாமலைக்கு சம்மன்..
டி.ஆர்.பாலு தொடர்ந்திருந்த அவதூறு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த நிலையில், இது குறித்த பரபரப்பு தீர்ப்பு ஒன்று இன்று வெளியாகியுள்ளது. அந்த தீர்ப்பில், தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை, ஜூலை 14ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்த சம்மனை அண்ணாமலைக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் அண்ணாமலைக்கு அனுப்பியுள்ளது.
இந்த மனுவை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், வழக்கு விசாரணைக்கு ஜூலை 14ம் தேதி நேரில் ஆஜராகும்படி தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலைக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும் படிக்க | 'கைதின் போது நெஞ்சு வலி... இதை தெலுங்கு படத்துல பாத்துருப்போம்' - சீமான்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ