பாஜகவில் பட்டியல் அணி மாநில தலைவராக இருந்த தடா பெரியசாமி, மக்களவை தேர்தலில் சீட் ஒதுக்காத காரணத்தால் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார். சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனை எதிர்த்து போட்டியிட திட்டமிட்டிருந்த அவர், தனக்கு அத்தொகுதி பாஜகவில் ஒதுக்கப்படும் என எதிர்பார்த்தார். ஆனால், அவருக்கு பதிலாக கார்த்திகாயினி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதில் கடும் அதிருப்தி அடைந்த தடா பெரியசாமி இன்று பாஜகவில் இருந்து விலகி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அண்ணாமலை மீதும் தடா பெரியசாமி கடும் அதிருப்தியில் இருக்கிறார்.
மேலும் படிக்க | மு.க.ஸ்டாலின் பொம்மை முதலமைச்சர்! அண்ணாமலை கடும் விமர்சனம்
அதிமுகவில் இணைத்துக் கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த தடா பெரியசாமி, பாஜகவில் இருந்து விலகியதற்கான காரணங்களை கூறினார். சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுவதற்காக ஏற்கனவே களப்பணி செய்து வந்ததாகவும், ஆனால் தன்னை பரிசீலிக்காமல் வேலூரைச் சேர்ந்த பெண்ணை கொண்டு வந்து சிதம்பரம் தொகுதியில் பாஜக வேட்பாளராக நிறுத்தியிருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார். பாஜகவின் பட்டியல் அணி மாநில தலைவராக இருக்கும் தனக்கு இது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்று கூறிய தடா பெரியசாமி, ஒரு மாநில அளவிலான பதவியில் இருப்பவருக்கே இப்படியான நிலைமை என்றால், அடிமட்ட கட்சி தொண்டர்களின் நிலைமை யோசித்து பாருங்கள் என ஆவேசமாக கூறினார்.
தொடர்ந்து பேசிய தடா பெரியசாமி, " நான் பாஜகவில் இருந்து விலகுவதற்கு மூன்று முக்கிய காரணம். மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல் முருகன், பாஜக அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் ஆகியோர் திட்டமிட்டு என்னை புறக்கணித்துவிட்டார்கள். சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அவர்கள் மூன்று பேரும் ரகசிய பேச்சுவார்த்தை நடத்திவிட்டு என்னை அங்கு நிற்கவிடாமல் பார்த்துக் கொண்டனர் என பகிரங்கமாக குற்றம்சாட்டுகிறேன். திருமாவளவனுக்கும் அண்ணாமலைக்கும் ரகசிய கூட்டணி இருக்கிறது. பாஜக வேட்பாளர் தேர்வே சரியில்லை. ஒரு சிண்டிகேட் போட்டு ஆளாளுக்கு ஒரு தொகுதி என பிரித்து வேட்பாளரை தேர்வு செய்து அறிவித்திருக்கிறார்கள்" என பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார்.
மேலும், இப்போது தான் மட்டுமே அதிமுகவில் இணைந்திருப்பதாக தெரிவித்திருக்கும் தடா பெரியசாமி இன்னும் இரண்டு ஒரு நாட்களில் தன்னுடைய ஆதரவாளர்களை அதிமுகவில் இணைக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். அத்துடன் அதிமுக போட்டியிடும் தொகுதிகளில் குறிப்பாக சிதம்பரம் உள்ளிட்ட தனித்தொகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாகவும் தடா பெரியசாமி அறிவித்துள்ளார். பாஜகவில் தீவிரமாக களப்பணியாற்றிக் கொண்டிருந்த தன்னை திட்டம்போட்டு வெளியேற வைத்த அண்ணாமலை குரூப்புக்கு தக்கபாடம் புகட்டுவேன் என்றும் தடா பெரியசாமி கூறியுள்ளார்.
மேலும் படிக்க | சசிகலா EPS-ஐ விட இளையவர்... குண்டை தூக்கிப்போட்ட கே.சி. பழனிச்சாமி - என்ன மேட்டர்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ