கர்நாடக மாநிலம் வழியாக தமிழகத்தைச் சேர்ந்த சிலர் ஊர் திரும்பிக்கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி நேருக்கு நேர் மோதிக் கொண்டு 5 பேர் உயிரிழந்தனர். இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் 5 பேரின் உடல்களையும் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் சுற்றுலா சென்றுவிட்டு கர்நாடக மாநிலம் வழியாக ஊர் திரும்பிக்கொண்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் இறந்தவர்கள் ஆம்பூரைச் சேர்ந்தவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.