ஆம் ஆத்மி பிரச்சாரத்தை முடித்து விட்டு.. இப்போது திமுகவுக்காக பணியாற்றும் பிரசாந்த் கிஷோர்

தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுக்கும் பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் திமுக உடன் கைகோர்கிறார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Feb 3, 2020, 11:29 AM IST
ஆம் ஆத்மி பிரச்சாரத்தை முடித்து விட்டு.. இப்போது திமுகவுக்காக பணியாற்றும் பிரசாந்த் கிஷோர் title=

சென்னை: அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் பிரசாந்த் கிஷோரின் உதவியை நாடுவதாக எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்ற கழகம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்தார். அடுத்த தேர்தலில் இந்திய அரசியல் நடவடிக்கைக் குழுவான பி.கே நிறுவனத்திக்கு பிரச்சாரத்தின் பொறுப்பை திமுக வழங்க உள்ளது. ஏறக்குறைய ஒரு தசாப்த காலமாக எதிர்க்கட்சியில் இருக்கும் திமுக, அதிமுகவிடம் இருந்து அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிக்கிறது. டெல்லி தேர்தலுக்காக அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியுடன் தற்போது பிரசாந்த் கிஷோர் குழு செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

டி.எம்.கே தலைவர் மு.க. ஸ்டாலின் ட்விட்டரில், "2021 தேர்தலில் @IndianPAC பதாகையின் கீழ் தமிழகத்தைச் சேர்ந்த பல திறமையான மற்றும் இளம் தொழில் வல்லுநர்கள் எங்களுடன் இணைகிறார்கள் என்றும், தமிழகத்தை மீண்டும் பழைய மகிமைக்கு கொண்டு வரும் எங்கள் திட்டங்களை வடிவமைக்க உதவுவதற்கு அவர்கள் எங்களுடன் இணைந்து பணியாற்ற இருகிறார்கள். இதை சொல்வது மனதுக்கு இதமாக இருக்கிறது எனக் கூறியுள்ளார்.

 

ஐபாக் நிறுவனம் ட்வீட்:
அந்த ட்வீட்டுக்கு பதிலளித்த ஐபாக் நிறுவனம், "இந்த வாய்ப்புக்கு மு.க. ஸ்டாலினுக்கு நன்றி. ஐ.பி.ஐ.சியின் தமிழக அணி திமுகவுடன் இணைந்து பணியாற்றுவதில் உற்சாகமாக உள்ளது. ஐபிஏசி குழு 2021 தேர்தலில் வெற்றிபெற உதவும், மேலும் உங்கள் தலைமையின் கீழ் மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதில் பங்களிக்கும் என இந்தியன் பொலிட்டிகல் ஆக்சன் கமிட்டி கூறியுள்ளது.

 

யார் இந்த பிரசாந்த் கிஷோர்?
ஆரம்பத்தில் சிட்டிசன்ஸ் பார் அக்கவுண்டபுள் கவர்னன்ஸ் என்ற அமைப்பில் வேலை பார்த்து வந்த பிரசாந்த் கிஷோர், கருத்து வேறுபாடு காரணமாக, அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறி இந்தியன் பொலிட்டிகல் ஆக்சன் கமிட்டி என்ற புதிய அமைப்பை தொடங்கினார். பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மற்றும் ஆந்திரா பிரதேச முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்துவர் தான் இந்த பிரசாந்த் கிஷோர். 

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News