சென்னை: இந்திய சுதந்திர தினம் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படும். அதன்படி இன்று இந்திய நாட்டின் 72-வது சுதந்திர தினத்தை நாட்டு மக்கள் வெகு மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர்.
சுதந்திர தினம் முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதலில் இன்று காலை 7.30 மணிக்கு செங்கோட்டையில் நாட்டின் பிரதமர் மூவர்ணக்கொடியை ஏற்றினார். பின்னர் நாட்டு மக்களுக்காக உரையாற்றினார்.
இதனையடுத்து, இன்று 72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடி ஏற்றி தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் மரியாதை செலுத்தினார். பின்னர் தமிழக மக்களுக்காக உரையாற்றினார். தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று தலைமைச் செயலகக் கோட்டை கொத்தளத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், மாற்றுத் திறனுடைய குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.#சுதந்திரதினம் #IndependenceDayIndia pic.twitter.com/CRTmaHbB6k
— AIADMK (@AIADMKOfficial) August 15, 2018